கமல் சொந்தமாக ஹிட்லர் காலத்து துப்பாக்கி வைத்து இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு திகழ்கிறார். தற்போது இவர் மாநகரம், கைதி, மாஸ்டர் என தொடர்ச்சியாக சூப்பர் டூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் விக்ரம் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.
இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறார். மேலும், இந்த படத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் படத்தில்,காயத்ரி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இது கமலின் 232 படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் தான் விக்ரம் படத்தின் முதல் பாடல் பத்தல பத்தல வெளியாகி இருந்தது.
இதையும் பாருங்க : உண்மையான ஆம்பள அதை கேட்க மாட்டான் – நாட்டை உலுக்கிய விஷ்மயா வழக்கு குறித்து பாலாஜி முருகதாஸ் போட்ட பதிவுக்கு குவியும் பாராட்டுக்கள்
விக்ரம் படம் ரிலீஸ்:
இந்த பாடலை கமல் எழுதி பாடி இருந்தார். அதுவும் இந்த பாடலை சென்னை தமிழில் பாடி இருந்தார். மேலும், இந்த பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. அதோடு இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக கமலின் விக்ரம் படம் அமைந்திருக்கிறது. மேலும், இந்த படம் ஜூன் மூன்றாம் தேதி வெளிவர இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் மே 15ஆம் தேதி விக்ரம் படத்தின் இசை வெளியிட்டு விழா விக்ரம் டிரைலர் வெளியீடு ஆகியவை சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது.
கமல்ஹாசன் அளித்த பேட்டி:
நடந்த முடிந்த விக்ரம் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ லான்ச் விழாவை விஜய் டிவியில் டெலிகாஸ்ட் செய்திருந்தார்கள். மேலும், இந்த படத்தில் அதிகமாக துப்பாக்கி காட்சிகள் காட்டப்பட்டிருக்கும். எல்லா நடிகர்களுமே கன் ஷூட்டில் இறங்கி இருப்பார்கள். படம் முழுவதுமே தீபாவளி வெடி போல் துப்பாக்கி சூட் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் இதுகுறித்து சமீபத்தில் பேட்டியில் கமலஹாசன் கூறி இருந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கமல்ஹாசன் அவர்கள் விக்ரம் படம் குறித்து விஜய் டிவிக்கு பேட்டி ஒன்று அளித்து இருந்தார்.
துப்பாக்கி குறித்து கமல் சொன்னது:
அதில் அவரிடம் டிடி உங்களுக்கு துப்பாக்கி என்றால் ரொம்ப பிடிக்குமா? என்று கேட்டிருந்தார். அதற்கு கமல், என்னிடம் ஹிட்லர் காலத்தில் வைக்கப்பட்டு இருந்த துப்பாக்கி இருக்கிறது. ஒரிஜினல் , லைசன்ஸ்சோட வைத்திருக்கிறேன். அதை தான் ஹேராம் படத்தில் பயன்படுத்தினேன் என்று கூறி இருந்தார். இதுகுறித்து கூட ஏற்கனவே பேட்டியில் லோகேஷ் கனகராஜ் கூறி இருந்தது, படத்திற்காக துப்பாக்கிகள் வேண்டும் என்று சொன்னவுடனே சினிமா துறையை சேர்ந்தவர்கள் துப்பாக்கிகளை அடுக்கி வைத்திருந்தார்கள். அதில் எனக்கு தேவைப்பட்டதை எடுத்துக்கொண்டேன். எனக்கு துப்பாக்கிகளை பற்றி தெரிந்து கொள்வதில் அதிக ஆர்வம்.
கமல்ஹாசன் துப்பாக்கி பிரியர்:
ஒரு பத்து துப்பாக்கியை எடுத்து கமல் சாரிடம் காண்பித்தேன். இதுதான் இப்போது இருக்கும் புது மாடல். ஆனால், mn6 மட்டும் கிடைக்கவில்லை என்று சொன்னேன். உடனே அவர் வேண்டுமா? என்று கேட்டார். நானும் வேண்டும் என்று சொன்னேன். பின் அவர் என்னை அழைத்துக் கொண்டு சென்றார். அங்கே ஒரு 30 லிருந்து 35 வகை mn 6 துப்பாக்கி இருந்தது. அதில் எனக்கு தேவையான இரண்டு கன் எடுத்துக் கொண்டேன் என்று கூறியிருந்தார். இப்படி கமலஹாசன் துப்பாக்கியில் மீது அதிக பிரியம் உடையவர் என்பது இதுநாள் வரைக்கும் பலருக்கும் தெரியாத ஒன்று. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.