நாட்டை உலுக்கிய விஸ்மயா வழக்கு குறித்து பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்தவர் விஸ்மயா. இவர் ஆயுர்வேத மருத்துவம் இறுதியாண்டு மாணவி ஆவார். இவருக்கு மோட்டார் வாகனத் துறையில் ஆய்வாளராக பணியில் இருந்த கிரண்குமார் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் ஆனது. இந்த திருமணத்துக்காக 100 சவரன் நகையும், 11 லட்சம் மதிப்புள்ள காரும், நிலமும், பணமும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது.
ஆனாலும், கூடுதலாக வரதட்சணை கேட்டு விஸ்மயாவை அவரது கணவர் கிரண்குமார் தொடர்ந்து கொடுமைப்படுத்தி இருந்தார். அது மட்டுமில்லாமல் அவர் விஸ்மயாவை கடுமையாக தாக்கியும் இருந்தார். இதனால் இரு வீட்டாருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் பிரச்சனை வெடித்து காவல் நிலையம் வரை சென்றது. பின் இருவீட்டாரையும் போலீஸ் சமாதானம் செய்து இருந்தது. ஆனால், அதன் பிறகு விஸ்மயாவை பிறந்த வீட்டுக்கு கிரன் குமார் அனுப்பவில்லை.
இதையும் பாருங்க : பத் சொன்னது சரி தான் – Ivfல் குழந்தை பெற்ற மனைவியும், 10 வருடம் குழந்தை இல்லாத கணவர் பதிவிட்ட உருக்கமான பதிவுகள்.
விஸ்மயா வழக்கு:
விஸ்மயாவை தொலைபேசியில் அவரது அம்மாவுடன் மட்டுமே பேச அனுமதிக்கப் பட்டிருந்தார். இருந்தாலும் தொடர்ந்து விஸ்மயாவை கிரன் குமார் துன்புறுத்திக் கொண்டே இருந்தார். பின் கடந்த ஆண்டு ஜூன் 19ஆம் தேதி விஸ்மயாவின் சடலம் குளியலறையில் கண்டெடுக்கப்பட்டு இருந்தது. கொல்லம் மாவட்டம் சாஸ்தான் கோட்டையில் தன் கணவரின் வீட்டு குளியலறையில் தொங்கிய நிலையில் அவருடைய சடலம் மீட்கப்பட்டது. அப்போது அவருக்கு 22 தான் ஆனது. மேலும், 22 வயது பெண் வரதட்சணை கொடுமையால் மரணமான சம்பவம் கேரளா மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பயங்கர அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.
கிரண் குமார் கைது:
பின் இந்த சம்பவம் குறித்து சோசியல் மீடியா முழுவதும் விஸ்மயா கணவன் கிரண் குமாரை கைது செய்ய வேண்டும் என்று கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். பின் கிரண் குமாரை போலீசார் கேரள போலீஸார் கைது செய்து இருந்தது. ஆனால், அவர் ஜாமினில் வெளியே வந்து இருந்தார். விஸ்மயா தற்கொலை செய்து கொண்டதாக கிரண்குமார் தரப்பில் சொல்லப் பட்டாலும் அது மர்மமான மரணம் ஆக பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது.
கிரண் குமாருக்கு கிடைத்த தண்டனை:
அதோடு கேரள அரசு கிரண் குமாரை பணி நீக்கம் செய்திருந்தார்கள். பின் இந்த வழக்கு கொல்லம் மாவட்டம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. அதன் அடிப்படையில் சில தினங்களுக்கு முன்பு இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி தீர்ப்பு வழங்கி இருந்தார். அதில் இந்திய தண்டனைச் சட்டம் 304b பிரிவின் கீழ் கிரண்குமார் குற்றவாளி எனத் தீர்ப்பளித்து அவரது ஜாமீனை யும் நீதிமன்றம் ரத்து செய்து அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 12.5 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பிக்பாஸ் பாலாஜி போட்ட பதிவு:
இதில் இரண்டு லட்சத்தை பாதிக்கப்பட்ட விஸ்மயா குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் இது தொடர்பாக பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் டீவ்ட் ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, உண்மையான ஒரு ஆண் வரதட்சணை கேட்கமாட்டான். அவர் சுய மரியாதை மற்றும் சுய வருமானத்தில் தான் வாழ்வார். பெண்கள் உங்களை ஒரு சொத்தாக அல்லது பொருளாக நினைப்பவர்களிடம் விலகி இருங்கள் என்று கூறி இருந்தார். தற்போது இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.