விக்ரம் வெற்றி : லோக்கிக்கு ‘L’ பிராண்ட் சொகுசு காரை பரிசாக வழங்கிய கமல் – விலை எவ்ளோ தெரியுமா ?

0
607
vikram
- Advertisement -

லோகேஷ் கனகராஜுக்கு கமலஹாசன் சொகுசு காரை பரிசாக வழங்கி உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கிய மாநகரம், கைதி, மாஸ்டர் போன்ற படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து இருக்கும் படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் இணைந்து உதயநிதி ஸ்டாலின் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், ஷிவானி, மைனா நந்தினி உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தைப் பொருத்தவரை ஒரு பழிவாங்கல் கதை என்றாலும் இயக்குனர் அதை சொல்லிய விதமும், படமாக்கிய விதமும் பாராட்டுகளை குவித்து இருக்கிறது. மேலும், அனைவரும் எதிர்பார்த்திருந்த கமலின் விக்ரம் படம் நான்கு ஆண்டுகளுக்கு பின் வெளிவந்து இருப்பதால் ரசிகர்கள் திரையரங்கில் கொண்டாடி வருகிறார்கள்.

- Advertisement -

விக்ரம் படம் பற்றிய தகவல்:

விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. இதுவரை விக்ரம் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும், லோகேஷை பாராட்டி கமல் கடிதம் ஒன்று எழுதி இருந்தார். அந்த கடிதம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. அதற்கு லோகேஷ் கனகராஜ் life-time செட்டில்மெண்ட் என்றும்
கூறியிருந்தார்.

கமல் குறித்த தகவல்:

அதோடு விக்ரம் படம் உலகம் முழுவதும் தாறுமாறாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை இல்லாத அளவிற்கு கமலின் படத்திற்கு வரவேற்பு கிடைத்திருப்பதால் கமல் ரொம்ப எமோஷனலாக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சமீப காலங்களில் வெளிவந்த படங்களில் இந்த அளவுக்கு மாசான காட்சிகளில் கமல் நடித்ததில்லை என்று கூறப்படுகிறது. விக்ரம் படத்தின் மூலம் கமலுக்கு மிகப்பெரிய வரவேற்பும், புகழும் கிடைத்திருக்கிறது.

-விளம்பரம்-

லோகேஷுக்கு கமல் கொடுத்த பரிசு:

இதற்கு முக்கிய காரணம் லோகேஷ் இயக்கம் தான். இந்த நிலையில் லோகேஷுக்கு, கமல் அவர்கள் விலை உயர்ந்த சொகுசு காரை பரிசாக அளித்திருக்கிற தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது லெக்சஸ் என்ற சொகுசு காரை தான் கமல் பரிசாக லோகேஷுக்கு வாங்கி தந்து இருக்கிறார். இந்த காரின் குறைந்த வேரியன்டின் விலை 60 லட்சத்தில் இருந்து ஆரம்பமாகி 2.50 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

இன்னொரு பரிசு கொடுத்த கமல்:

அதுமட்டுமில்லாமல் கமல் அவர்கள் லோகேஷ் கனகராஜ் இடம் பணியாற்றிய 13 அசிஸ்டன்ட் டைரக்டர்களுக்கும் அப்பாச்சி பைக்கை பரிசாக வாங்கித் தந்திருக்கிறார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து லோகேஷ் அவர்கள் விஜய்யின் தளபதி 67 என்ற படத்தை இயக்க இருக்கிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எல்லாம் வெளியாகி இருக்கிறது.

Advertisement