இதனை விஷயத்தை இத்தனை நாள் பேசாமல் இருந்த கௌதமி கமல் அரசியல் பிரவேசம் செய்தவுடன் கூறியுள்ளார். இது குறித்து பதில் அளித்த ராஜ்கமல் பிலிம்ஸ், கௌதமிக்கு சம்பள பாக்கி கிடையாது. அனைத்தையும் கொடுத்தாகிவிட்டது. இனி கௌதமி தான் நாங்கள் சம்பளம் கொடுக்காததற்கு ஆதாரத்தை காட்ட வேண்டும் என கூறியது கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ்.
இது குறித்து தற்போது பேசியுள்ளார் கமல்ஹாசன், இந்த விஷயங்களை கம்பெனி தான் டீல் செய்கிறது. சம்பள பாக்கி இருந்தால் ராஜ்கமல் பிலிம்ஸ் பார்த்துக்கொள்ளும். இது குறித்து நான் பேச தேவை இல்லை என கூறி பிரச்சனையை முடித்துவிட்டார் கமல்.




