எப்போது வீடு திரும்புகிறார் கமல் ? டிஸ்சார்ஜ் குறித்து வெளியான தகவல் – இந்த வார பிக் பாஸில் கலந்துகொள்வாரா இல்லையா ?

0
252
kamal
- Advertisement -

என்றென்றும் மக்கள் மத்தியில் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் ஆவார். அதோடு இவர் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் தொகுப்பாளரும் ஆவார். சமீபத்தில் கமலஹாசன் அவர்கள் அமெரிக்க பயணம் முடிந்து திரும்பிய போது இவருக்கு சளி, இருமல் இருந்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கோவிட் டெஸ்ட் எடுத்திருக்கிறார். அப்போது கமலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

-விளம்பரம்-

இதனால் கமலுக்கு தனியார் மருத்துவமனை ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், கமலுக்கு கீழ் மூச்சு குழாயில் தொற்று இருப்பதால் சிகிச்சை அவசியம் என்றும் லேசான காய்ச்சல் இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறியிருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் கமலஹாசன் கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டு டோஸ்களும் போட்டுக் கொண்டதால் பெரிய அளவில் அவருக்கு பாதிப்பு நேரவில்லை என்றும் விரைவில் குணமடைந்து விடுவார் என்றும் மருத்துவர் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி இருந்தது.

இதையும் பாருங்க : இனி ‘தல’னு கூப்பிட வேண்டாம். அதுக்கு பதில் இந்த 3 பெயர வச்சி கூப்பிடுங்க. அஜித் வெளியிட்ட அறிக்கை.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் கடந்த வாரம் கூட பிக்பாஸ் நிகழ்ச்சியில் விரச்சுவலாக தோன்றி கமலஹாசன் மக்களிடம் பேசி இருந்தார். இந்நிலையில் கமல் இப்போது எப்படி இருக்கிறார்? எப்போது திரும்புவார்? என்று பலரும் விசாரித்து வருகிறார்கள். இதற்கு கமல் சார் தரப்பிலிருந்து கூறியிருப்பது, கமல் சார் நலமுடன் இருக்கிறார். கடந்த 4 நாட்களாக அவருக்கு காய்ச்சல் மற்றும் இருமல் இல்லை. முற்றிலும் குணமாக சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறார். தற்போது நன்றாக சாப்பிடுகிறார். தேவைப்பட்டால் சில பரிசோதனைகள் மட்டும் செய்ய மருத்துவர்கள் திட்டமிட்டிருக்கின்றனர். அந்த பரிசோதனைகளை பொறுத்தே கமலஹாசனை டிஸ்சார்ஜ் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், பரிசோதனைகள் தேவையில்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டால் நாளையே கூட கமல் டிஸ்சார்ஜ் ஆக வாய்ப்பிருக்கிறது என்று கமலஹாசனின் நண்பர்கள் வட்டாரம் அறிவித்திருக்கிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க தற்போது மருத்துவமனையில் இருந்து அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் வருகிற டிசம்பர் 3ஆம் தேதி வரை கமல் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். பின் 4 ஆம் தேதியில் இருந்து கமல் தன் வேலைகளில் ஈடுபடலாம் என்று அறிவித்து இருக்கிறார்கள். இதனை பார்த்த ரசிகர்கள் அப்படினா, இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வாரா? என்ற ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement