100 நாள் ஓடிய 100வது படம் – ஆனாலும், இந்த படத்திற்கு பின் 5 வருடங்கள் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை மூடி வைத்த கமல். காரணம் இதான்.

0
643
kamal
- Advertisement -

தான் கதை எழுதி நடித்த படம் தோல்வி அடைந்ததால் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை கமல் மூடி வைத்திருந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் தன்னுடைய நடிப்பின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்றவர் உலக நாயகன் கமலஹாசன். இவர் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது உலக நாயகனாக கலக்கி கொண்டு இருக்கிறார். மேலும், இவர் இந்தியத் திரைப்பட நடிகர், திரைக்கதையாசிரியர், பாடலாசிரியர், பின்னனிப் பாடகர், நடன அமைப்பாளர், இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், அரசியல்வாதி என பல முகங்களை கொண்டவர். விக்ரம் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் கமல் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த நிலையில் கமல் நடித்த ராஜபார்வை படம் குறித்த ஒரு சுவாரசியமான தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. 1981 ஆம் ஆண்டு இயக்குநர் சங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் வெளியான படம் தான் ராஜபார்வை. இது கமலஹாசனின் நூறாவது திரைப்படம். இந்த படத்தை கமல் தயாரித்ததோடு மட்டுமில்லாமல் படத்தின் கதையும் கமலே எழுதியிருந்தார். படத்தில் நல்ல வசதியான குடும்பத்தில் பிறந்த ரகு சிறுவயதிலேயே தன்னுடைய அம்மாவை இழந்து விடுகிறார். ரகுவின் மீது அப்பா பாசத்தை காட்டினாலும் சித்தியின் கொடுமையால் ரகு பல கஷ்டங்களை அனுபவித்தார்.

- Advertisement -

ராஜபார்வை படம்:

அவருக்கு ஒரே ஆறுதல் அவருடைய பாட்டி மட்டும்தான். ஒரு கட்டத்தில் பாட்டியும், அப்பாவும் இறந்து விட பாசத்திற்காக ரகு ஏங்குகிறார். பின் ரகுவிற்கு ஏற்பட்ட உடல்நல குறைவால் அவருக்கு கண் பார்வை போய்விடுகிறது. இதனால் அவருடைய சித்தி ரகுவை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார். பார்வையற்ற பள்ளியில் சேர்ந்த ரகு இசையில் ஆர்வம் காட்டி வரும் நாட்களில் மிகப்பெரிய வயலின் கலைஞராக வருகிறார். இப்போது நாயகி நான்சிக்கும் ரகுவிற்கும் இடையே நல்ல பழக்கம் ஏற்படுகிறது. இவர்களுடைய பழக்கமும் காதலாக மாறுகிறது.

படம் குறித்த தகவல்:

ஒரு கட்டத்தில் இவர்களின் காதல் விவகாரம் நான்சி வீட்டிற்கு தெரிய வர மதப் பிரச்சனையின் காரணமாக இவர்கள் இருவரையும் பிரிக்க முயல்கிறார்கள். இறுதியில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. இந்த படத்தில் கண் தெரியாத பார்வையற்ற ரகு கதாபாத்திரத்தில் கமல் நடித்திருந்தார். கிறிஸ்துவ பெண்ணாக நான்சி கதாபாத்திரத்தில் மாதவி நடித்திருந்தார். இருவருக்கும் இடையே நடக்கும் காதல் கதை தான் படம். பிரபல தயாரிப்பாளரும், பிரசாத் ஸ்டுடியோவை நிறுவியவருமான எல்.வி.பிரசாத் நாயகி மாதவியின் தாத்தாவாக நடித்தார்.

-விளம்பரம்-

படம் குறித்த விமர்சனம்:

அப்பாவாக சந்திரஹாசனும், சர்ச் ஃபாதிரியாராக சாருஹாசனும் நடித்தனர். இந்த படத்திற்கு இளையராஜாவின் இளையராஜா இசையமைத்திருந்தார். இருந்தாலும் படம் பெரிய தோல்வியை சந்தித்து இருந்தது. இந்த படத்தின் கதை பட்டர்பிளைஸ் ஆர் ப்ளை என்ற ஹாலிவுட் படத்தின் தழுவலாக இருந்தது. அது மட்டும் இல்லாமல் இதனுடைய கிளைமாக்ஸ் தி கிராஜுவேட் படத்திலிருந்து எடுக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தின் 100 வது நாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் எம்ஜிஆர் கமலுக்கு பரிசு அளித்து இருந்தார்.

100 நாள் ஓடி படம் தோல்வி:

இந்த படத்தை கமல் தன்னுடைய சகோதரர்கள் சந்திரகாசன், சாருஹாசனுடன் இணைந்து ஹாசன் பிரதர்ஸ் என்று பெயரில் தயாரித்தார். மேலும், இந்த படம் வெளியாகி 42 வருடங்கள் ஆகிவிட்டது. இந்த படம் படுதோல்வி அடைந்ததால் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கமலஹாசன் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தையும் மூடி வைத்திருந்தாராம். விமர்சனரீதியாக ராஜபார்வை இன்று கொண்டாடப்பட்டாலும், 100 நாள்கள் ஓடிய போதிலும் அன்று அதுவொரு தோல்விப் படமாகவே கருதப்பட்டது. கமர்ஷியலாக படம் ஹாசன் பிரதர்ஸின் கையை கடித்தது.

Advertisement