2.0 ட்ரைலர் வெளியிட்டு விழாவில் இந்தியன் 2 படத்தின் நாயகி உறுதியானது…!

0
861
indian-2
- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘2.0’ படத்தின் ட்ரைலர் வெளியிட்டு விழா தற்போது பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பல தமிழ் சினிமா பிரபலங்களும் வீடியோ மூலம் ‘2.0’ படத்தை பற்றி பேசியதை திரையிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

Kajalagarwal

- Advertisement -

இதில் நடிகர் விஷால், இசையமைப்பாளர் அனிருத் , உலக நாயகன் கமல்ஹாசன் போன்றவர்கள் வீடியோ மூலம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருந்தனர். இந்த விழாவின் போது நடிகை காஜல் அகர்வால் பேசிய வீடியோ ஒன்றும் வெளியாகியது.

காஜல் அகர்வால் பேசிய அடுத்த கமல் பேசிய வீடியோ ஒன்றும் வெளியாகியது. நடிகர் கமல்ஹாசன் ஷங்கர் இயக்கி வரும் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருவதால் வீடியோ மூலம் ஷங்கருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

-விளம்பரம்-

நீண்ட நாட்களாக இந்தியன் 2 படத்தின் கதாநாயகி யார் என்ற கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் ஓடிக்கொண்டிருந்த நிலையில் நடிகை நயன்தாரா ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கவிருக்கிறார் என்ற செய்திகள் பரவின. ஆனால், தற்போது வந்த தகவலின்படி ‘இந்தியன் 2’ படத்தில் நடிகை காஜல் அகர்வால் கமலுடன் ஜோடி சேர உள்ளார் என்று உறுதியாகியுள்ளது.

Advertisement