விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் – அட்லீயை மீம் மெட்டிரியளாக மாற்றி வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

0
1177
atlee

சினிமா உலகில் வளர்ந்து வரும் இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் அட்லீ. ஆரம்பத்தில் ஷங்கரின் உதவி இயக்குனராக இருந்த அட்லீ கடந்த 2013ம் ஆண்டு ஆர்யா,ஜெய் நடிப்பில் வெளிவந்த ‘ராஜா ராணி’ படத்தை இயக்கினார். இந்த படம் அட்லீ தமிழ் சினிமா உலகில் முதலில் இயக்கிய படமாகும். பின் ராஜா ராணி படத்தைத் தொடர்ந்து அட்லீ தளபதி விஜய் அவர்களின் “தெறி” படத்தை இயக்கினார். அட்லீ இயக்கிய முதல் படமான ராஜா ராணி துவங்கி இறுதியாக வெளியாக பிகில் படம் வரை அட்லீ இயக்கும் படங்களின் காட்சிகள் காபி தான் என்று பல ஆதாரங்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

ராஜா ராணி – மௌன ராகம், தெறி – சத்ரியன். மெர்சல் – அபூர்வ சகோதரர்கள் பிகில் – சக்தே இந்தியா என்று பல கிண்டல்கள் அட்லீ மீது முன்வைக்கப்பட்டு தான் வருகிறது. ஆனாலும், 7 ராகம் தான் 7 ஸ்வரம் தான் அதனால் எந்த படம் எடுத்தாலும் அது ஒரு படத்தோட காபி மாதிரி தான் இருக்கும் தான் எடுக்கும் படங்கள் தன்னுடைய சொந்த கதை தான் என்று தத்துவம் பேசுவார் அட்லீ.

இதையும் பாருங்க : உங்க அக்கற ஒன்னும் தேவயில்ல -தனது ரசிகர்களையே பிளாக் செய்த சீரியல் நடிகை. இதான் காரணமாம்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் வெளியான கமலின் ‘விக்ரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வைத்து அட்லீயை கலாய்த்து பலரும் மீம்களை ஷேர் செய்து வருகின்றனர். தமிழில் மாநகரம், கைதி போன்ற படங்களை தொடர்ந்து மாஸ்டர் படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் கூட கமல் நடித்த ‘நம்மவர்’ படம் போல இருந்தது என்று பல மீம்கள் வைரலானது.

அவ்வளவு ஏன் சமீபத்தில் கைதி படத்தின் கதை தன்னுடைய கதை என்று ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர தற்போது கைதி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க தடை கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று ‘விக்ரம்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி இருந்தது.இதை பலரும் விருமாண்டி போஸ்டர் போல உள்ளது என்று கேலி செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் காபி என்றதும் நெட்டிசன்களுக்கு அட்லீ தானே முதலில் நினைவிற்கு வருவார். அந்த வகையில் விக்ரம் போஸ்டரையும் விருமாண்டி போஸ்ட்டரையும் ஒப்பிட்டு ‘இதே நான் செஞ்சி இருந்தால் காபினு சொல்லி இருப்பீங்க’ என்று அட்லீ புலம்புவது போல அட்லீயின் மீம்கள் வைரலாகி வருகிறது.

Advertisement