கனா காணும் காலங்கள் டூ காமெடி ராஜா – பல கஷ்டங்களை தாண்டி வந்த ராஜு ஜெயமோகன் மனைவி யார் தெரியுமா ?

0
2925
raju
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியலில் ‘நாம் இருவர் நமக்கு இருவர் 2’ சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் கத்தி என்கிற கதிரேசன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் ராஜி ஜெயமோகன். இந்நிலையில் நடிகர் ராஜூ ஜெயமோகன் பற்றி பலரும் அறிந்திராத தகவல் பற்றி நாம் இங்கு பார்க்கலாம். நடிகர் ராஜூ ஜெயமோகன் அவர்களின் சொந்த ஊர் திருநெல்வேலி. இவர் பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பை முடித்துவிட்டு பல கனவுகளுடன் சினிமாவுக்குள் நுழைந்தார்.

-விளம்பரம்-

இவர் தமிழ் சினிமாவில் இயக்குனரும் நடிகருமான பாக்யராஜின் உதவி இயக்குனராக சில காலம் பணியாற்றியிருந்தார். அதன் பிறகு தான் விஜய் டிவியில் பிரபலமான சீரியல்களில் ஒன்றான கனா காணும் காலங்கள் கல்லூரி சாலை சீசனில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் ரோலில் நடித்த கவினுக்கு நண்பராக நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : ‘என்ன பாத்தா 2 கொழந்த பெத்த மாதிரியா இருக்கு’ கேலியாக பதில் கூறியதால் வந்த வினை – கடுப்பான இனியா.

- Advertisement -

இதனை தொடர்ந்து இவர் ஆண்டாள் அழகர்,பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து இருந்தார். பிறகு இவர் சின்னத்திரையில் மிகவும் பரிச்சயமான முகமாக தோன்றினார். அதற்கு பின்பு கவின் நடிப்பில் வெளிவந்த நட்புனா என்னனு தெரியுமா படத்தில் லீட் ரோலில் நடிகர் ராஜூ நடித்திருந்தார். இந்த படம் மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்காததால் ராஜூ சின்னத்திரை பக்கமே வந்துவிட்டார். தற்போது இவர் நாம் இருவர்நமக்குஇருவர் சீசன் 2 சீரியலில் மாயன் நண்பராக கத்தி கதாபாத்திரத்தில் கலக்கிக் கொண்டு வருகிறார்.

இந்த சீரியல் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் சேர்ந்துள்ளது. இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக காயத்ரி நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் சீரியலில் காயத்ரிக்கும், இவருக்கும் இடையே உள்ள ரொமான்ஸ் சீன்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இவர் பல சீரியல்களிலும், சில திரைப் படங்களில் நடித்திருந்தாலும் கத்தி கதாபாத்திரம் மூலம் தான் மக்கள் மத்தியில் பரிச்சயமானார். அதிலும் இந்த சீரியலில் இவருடைய பேச்சு ரசிகர்கள் மத்தியில் கவர வைத்தது.

-விளம்பரம்-
Raju Jeyamohan (@raju_jeyamohan) | Twitter

மேலும், பல போராட்டங்களுக்கு பிறகு நடிகர் ராஜூ அவர்கள் சின்னத்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சின்னத்திரையில் தனெக்கென ஒரு முத்திரை பதித்த பின்பு தான் இவர் திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய திருமணம் காதல் திருமணம் என்று கூறப்படுகிறது.

Advertisement