பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த ‘காஞ்சனா 3’ படத்தில் நடித்த வெளிநாட்டு நடிகை மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. காஞ்சனா படத்தின் தொடர்ச்சியாக காஞ்சனா 3 திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியாகி இருந்தது.இந்த படத்தில் ஓவியா, நிக்கி தம்போலி, வேதிகா என்று 3 நாயகிகள் நடித்து இருந்தனர். இதில் பிளாஸ் பேக்கில் வரும் லாரன்ஸின் காதலியாக ரோஸி கதாபாத்திரத்தில் நடித்த ரஷ்ய நடிகை அலெக்ஸாண்ட்ரா ஜாவி என்பவர் நடித்து இருந்தார்.
இப்படி ஒரு நிலையில் இவர் கோவாவில் உள்ள வாடகை குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.34வயதான அலெக்ஸாண்ட்ரா ஜாவி, கோவாவில் உள்ள ஒரு வாடகை குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். இப்படி ஒரு நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இவரது அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்து உள்ளார்.
இதையும் பாருங்க : அண்ணாமலை சொல்லி தான் KT ராகவனின் வீடியோவை வெளியிட்டாரா மதன். அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை.
அந்த அறையின் உட்புறமும் தாழிடப்பட்டு இருந்துள்ளது. இதுகுறித்து அங்கு இருந்தவர்கள் கூறுகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் இவரின் காதலர் இவரை விட்டு சென்று விட்டததாகவும், அதனால் அலெக்ஸாண்ட்ரா ஜாவி மன அழுத்தத்தில் இருந்து இருக்கலாம் என்றும் கூறி இருக்கின்றனர். அலெக்ஸாண்ட்ரா ஜாவி, காஞ்சனா 3 திரைப்படம் வெளியான அதே ஆண்டு அதாவது கடந்த 2019ஆம் ஆண்டு தன்னை சென்னையை சேர்ந்த புகைப்படக் கலைஞர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக போலீசில் புகார் அளித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வழக்கு தற்போது வரை நடைபெற்று வந்துள்ளது. ஆனால், அந்த வழக்கிற்கும் இந்த தற்கொலைக்கும் சம்மந்தம் இல்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். அதே போல அலெக்ஸாண்ட்ராவின் கடைசி சமூக வலைதள பதிவில் ‘எல்லோர் வாழ்விலும் மாற்றங்கள் நிகழ்கின்றன. சிலர் அதனைப் பயன்படுத்திச் சிறந்த வாழ்கையை ஏற்படுத்திக்கொள்கிறார்கள். மற்றவர்கள் வருங்கால வாழ்கையைக் காண முடியாமல் கடந்த காலத்தை நினைத்துக்கொண்டு இருக்கின்றனர்” எனப் பதிவிட்டுள்ளார்.