பிக் பாஸ் 5 வில் கலந்துகொள்ளப் போகும் டிக் டாக் பிரபலம் – அப்போ, செமயா இருக்க போது போங்க.

0
7762
Bb5
- Advertisement -

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது அந்த வகையில் விஜய் டிவியில் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சமீபத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கூட முடிவடைந்தது. இந்த சீசனில் முதல் இடத்தை ஆரியும் இரண்டாம் இடத்தை பாலாஜியும் பிடித்து இருந்தனர். தமிழில் ஒளிபரப்பாவது போல ஹிந்தி, மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-
bb5

கடந்த ஆண்டு கூட பிக் பாஸ் நிகழ்ச்சி கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக போகிறது என்ற செய்திகள் கூட வெளியானது. ஆனால், அதனை முற்றிலும் மறுத்தது எண்டிமால் நிறுவனம். இப்படி ஒரு நிலையில் அடுத்த சீசன் எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்தள்ளது.

இதையும் பாருங்க : வருங்கால வாழ்கையைக் காண முடியவில்லை – தற்கொலை செய்து கொண்ட காஞ்சனா பட நடிகை, பின்னணி என்ன ?

- Advertisement -

ஆனால், அடுத்த சீசனும் விஜய் டிவியில் தான் ஒளிபரப்பாக இருகிறது என்று உறுதியாகிவிட்டது. மேலும், இந்த சீசன் அக்டோபர் மாதம் துவங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கான போட்டியாளர்களுக்கான தேர்வு நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த சீசனில் டிக் டாக் புகழ் ஜி பி முத்து கலந்துகொள்ள இருப்பதாக நம்பகரமான தகவல் வெளியாகியுள்ளது.

டிக் டாக் பிரபலமான ஜி பி முத்து டிக் டாக்கில் பிரபலமானதை விட யூடுயூபில் பிரபலமானது தான் அதிகம். அதிலும் இவருக்கு வரும் லெட்டர்ரை படித்தே இவர் பிரபலமாகிவிட்டார். இதன் மூலம் இவருக்கு சினிமா வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் இருக்கிறது. தற்போது இவர் சன்னி லியோன் நடிக்கும் தமிழ் படம் ஒன்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement