Home பொழுதுபோக்கு சமீபத்திய

அக்னிபத் திட்டத்தை ஆதரிக்க கங்கனா சொன்ன புதிய காரணம் – கடுப்பான இளைஞர்கள்

0
88
kangana
-விளம்பரம்-

அக்னிபத் திட்டத்தை ஆதரித்து பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பாலிவுட் சினிமாவில் பட்டைய கிளப்பி கொண்டு இருக்கிறார் நடிகை கங்கனா ரனாவத். இவர் முதலில் மாடல் அழகியாக இருந்து திரைப்பட நடிகை ஆனார். 2006 ஆண்டு வெளிவந்த ஹிந்தி திரைப்படம் மூலம் தான் இவர் சினிமா உலகில் தோன்றி இருந்தார். பின் தமிழில் ஜீவா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த ”தாம் தூம்” படத்தின் முலம் அறிமுகமாகி இருந்தார் நடிகை கங்கனா ரனாவத்.

-விளம்பரம்-

பின் இவருக்கு தமிழில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காததால் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வந்தார். தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் கங்கனா. அதோடு இவரை பாலிவுட் நயன்தாரா என்று அழைக்கிறார்கள். அதோடு இவர் இந்தியில் கதாநாயாகிக்கு முக்கியதுவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். பின் தமிழில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமாக வெளிவந்த ‘தலைவி’ படத்தில் கங்கனா நடித்தார்.

இதையும் பாருங்க : அவார்டு கொடுக்கறதா கூப்பிட்டு அசிங்கப்படுத்தி அனுப்பிடுவாங்க – பல ஹீரோயின்களின் குரலாய் ஒலிக்கும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஐஸ்வர்யா.

நடிகை கங்கனா ரனாவத் குறித்த தகவல்:

இந்த படத்தை இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கி இருந்தார். இந்த படம் திரையரங்கில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று இருந்தது. சமீபத்தில் வெளிவந்த லாக் அப் ரியாலிட்டி நிகழ்ச்சியை நடிகை கங்கனா ரனாவத் தொகுத்து வழங்கி இருக்கிறார். இப்படி இவர் தன்னுடைய கேரியரில் பிசியாக இருந்தாலும் சோசியல் மீடியாவில் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி விடுகிறார். அந்த வகையில் தற்போது பிரதமர் மோடியை புகழ்ந்து கங்கனா பேசி இருந்தது சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

அக்னிபத் திட்டம்:

-விளம்பரம்-

அதுஎன்னவென்றால், இந்திய ராணுவத்தில் நான்கு ஆண்டுகள் மட்டும் பணிபுரியும் வகையில் புதிய ஆள் சேர்க்கும் திட்டம் தான் அக்னிபத் திட்டம். இந்த திட்டத்திற்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்திருந்தது. இந்த அறிவிப்பு வெளியான நாள் முதலே பீகார், உத்தர பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில் பெரும் போராட்டம் வெடித்து. மேலும், இந்த பணிகளில் சேருபவர்களுக்கு பல்வேறு அரசு பணிகளில் முன்னுரிமை வழங்கப்படும் என பாஜக ஆளும் மாநில அரசுகளும், மத்திய அரசும் சில துறைகளும் அறிவித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

நடிகை கங்கனா ரனாவத் அளித்த பேட்டி:

இருந்தும் பல்வேறு மாநிலங்களில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பல இடங்களில் ரயிலுக்கு தீ வைக்கும் சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. ஆனால், அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற முடியாது என பாதுகாப்பு துறை உயர் அதிகாரி திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் இது தொடர்பாக பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, அக்னிபத் திட்டத்தை கொண்டு வந்ததற்காக பிரதமர் மோடிக்கு பாராட்டுகள். இஸ்ரேல் போன்ற பல நாடுகள் தங்கள் நாட்டு இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சியை கட்டாயமாக்கி இருக்கிறது.

இன்றைய இளைஞர்களின் நிலை:

ஒழுக்கம், தேசியவாதம் உள்ளிட்ட மதிப்பீடுகளைக் கற்றுக் கொள்ளவும், தேசிய பாதுகாப்பு என்ன என்பதை அறிந்து கொள்ளவும் இளைஞர்கள் சில ஆண்டுகள் ராணுவத்தில் பணியாற்ற வேண்டும். பழங்காலத்தில் இளைஞர்கள் குருகுலம் சென்று கல்வி கற்றது போல தற்போது இத்திட்டத்தில் இணைந்து நாட்டிற்காக சேவை செய்ய வேண்டும். நாட்டில் தற்போது உள்ள இளைஞர்கள் பப்ஜி விளையாடுவதிலும், போதை பழக்கத்துக்கு அடிமையாவதை திறம்பட கையாள மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் உதவும் என்று கூறியிருக்கிறார். ஆனால், இப்படி கங்கனா ரனாவத் கூறியிருப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து கமெண்ட் போட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news