கன்னட உலகின் பாக்ஸ் ஆப்ஸ் சுல்தான் மீது செருப்பை வீசி ரசிகர் – அவரின் இந்த பேச்சு தான் காரணம்.

0
471
darshan
- Advertisement -

பிரபல நடிகராக கனடா சினிமாவில் வளம் வருபவர் நடிகர் தர்ஷன் தூகுதீபா. கன்னட திரையுலகில் பாக்ஸ் ஆபீஸ் சுல்தான் என்று அழைக்கப்படும் இவர் சமீபத்தில் நடித்திருந்த “கிராந்தி” என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் தயாரிப்பு முடிவடைந்த நிலையில் இந்த பாடத்தை விளம்பரப்படுத்தும் விழாவில் கலந்து கொண்டு பேசியிருந்தார். அப்போது திடீரென காலனியை கொண்டு மர்ம நபரால் தாக்கப்பட்டார். இதனால் அங்கே பரபரப்பு நிலவியது. மேலும் இந்த வீடியோவானது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது

-விளம்பரம்-

ப்ரோமோஷன் விழா :

கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா என்ற “கிராந்தி” படம் அடுத்த வருடம் 23ஆம் தேதி ஜனவரியில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தில் பாடல் ப்ரோமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடத்தப்பட்டது. இதில் நடிகர் புனித்ராஜின் பல ரசிகர்கள் கலந்து கொண்டார். நிகழ்ச்சி தொடங்கி நடிகை ரசிதா ராம் பேசும் போது, ​​தர்ஷன் மீது மர்மநபர் ஒருவர் செருப்பை வீசினார். இதற்கு பிறகு உடனடியாக தனிக்காவல்படை அவரை சூழ்ந்து கொண்டது.

- Advertisement -

இதற்கு பிறகு கூட்டத்தில் இருந்த ரசிகர்களை மற்ற நடிகர்கள் அமைதிப்படுத்த “அது உங்க தப்பு இல்லை தம்பி எதிர்பாராத சம்பவம்” என்றார் தர்ஷன் தூகுதீபா.தர்ஷன் தான் நடிக்கும் ‘கிராந்தி’ படத்திற்காக பல்வேறு இடங்களுக்கு சென்று படத்தை ப்ரமோஷன் செய்து வருகிறார். ஆனால் இப்படியொரு தாக்குதல் நடந்த பிறகும் கூட திட்டமிட்டபடி மீதமுள்ள அனைத்து நிகழ்ச்சிகளிலும் தர்ஷன் கலந்து கொண்டு பேசி வருகிறார்.

தக்குதலுக்கான காரணம் :

நடிகர் தர்ஷன் மீது செருப்பு வீச்சு சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் தாக்குதலுக்கான காரணம் என்னவென்று தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்னர் தர்ஷன் தூகுதீபா அதிர்ஷ்ட தேவதையை பற்றி பேசும் போது “அதிர்ஷ்ட தேவதை எபோதாவதுதான் கதவை தட்டும்.

-விளம்பரம்-

கண்டனம் தெரிவிக்கும் நடிகர்கள் :

அப்படி தட்டும்போது அவளை பிடித்து உங்களுடைய படுக்கையறைக்குள் இழுத்து நிர்வாணமாக்கி விடுங்ககள். மேலும் நீங்கள் அவளுடைய ஆடைகளைக் எடுத்துக்கொள்ளுங்கள் இல்லையென்றால் அவள் ஓடி விடுவாள் என்று தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்திருந்தார்.இதைத் தொடர்ந்து, பலர் அதிர்ஷ்ட தேவதையை பற்றி இந்த மோசமான கருத்துகளை அவர் பேசியதற்கு தங்களுடைய கண்டணங்களை தெரிவித்து மன்னிப்பு கேட்ட வேண்டும் என்று கூறி வந்தனர்.

இந்த நிலையில் தான் தர்ஷன் மீது செருப்பு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கன்னட திரையுலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. இதை தொடர்ந்து இதற்கு பல பிரபல நடிகர்கள் கண்டங்களை தெரிவித்து வரும் நிலையில் கன்னட சூப்பர் ஸ்டாரான சிவ ராஜ்குமார் இது போன்று மக்கள் வன்முறையில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement