உதயநிதி அமைச்சரான பின் வெளியாகி இருக்கும் முதல் படம் – எப்படி இருக்கிறது கண்ணை நம்பாதே ? முழு விமர்சனம் இதோ.

0
821
udhay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் உதயநிதி ஸ்டாலின். தற்போது உதயநிதி ஸ்டாலினின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கண்ணை நம்பாதே. இந்த படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தை இயக்கிய இயக்குனர் மாறன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் ஸ்ரீகாந்த், பிரசன்னா, ஆத்மிகா, சதீஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். கிரைம் திரில்லர் பாணியில் இந்த படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர். மேலும், பல எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியிருக்கும் கண்ணை நம்பாதே படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் உதயநிதி அவர்கள் ஒரு வீட்டில் வாடகைக்கு வசித்து வருகிறார். அவர் அந்த வீட்டின் உரிமையாளர் மகளையே காதலிக்கிறார். ஒருநாள் இவர்களுடைய காதல் விவகாரம் வீட்டின் உரிமையாளரும், காதலியின் தந்தைக்கு தெரிய வருகிறது. உடனடியாக அவர் உதநிதியை வீட்டை காலி செய்ய சொல்கிறார். இதனால் உதயநிதி தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து வீடு தேடி அலைகிறார். பின் இறுதியில் வாடைக்கு ஒரு வீட்டை கண்டுபிடிக்கிறார் உதயநிதி.

- Advertisement -

ஆனால், அந்த வீட்டில் ஏற்கனவே பிரசன்னா வசித்து வருகிறார். மேலும், அவர் ஓரிரு நாட்களில் காலி செய்து விடுவார் என்று தெரிய வருகிறது. இதனால் அந்த வீட்டிற்கு உதயநிதி குடியேறி கொள்கிறார். பின் ,பிரசன்னாவும் உதயநிதியின் நண்பரும் சேர்ந்து மது அருந்தி கொண்டிருக்கிறார்கள். அப்போது சாலையில் உதயநிதி ஒரு விபத்தை பார்க்கிறார். உடனடியாக அவர் அந்த விபத்து நடந்த இடத்திற்கு சென்றதும் காரில் ஒரு பெண் நிறைய அடிபட்டு வாகனத்தை ஓட்ட முடியாத நிலையில் இருக்கிறார்.

பின் அந்த பெண்ணை உதயநிதி வீட்டில் இறக்கி விடுவதாக சொல்லி அழைத்துச் செல்கிறார். அந்தப் பெண் தன்னுடைய வீட்டில் இறங்கிக் கொண்டது மட்டுமில்லாமல் காரை உதயநிதியிடம் கொடுத்து காலையில் கொண்டு வாங்க உங்களுடைய உதவிக்கு நன்றி என்று சொல்கிறார். இதை எல்லாம் உதயநிதி தன்னுடைய நண்பர்களுடன் சொல்லி அடுத்த நாள் அந்த பெண்ணின் வீட்டிற்கு செல்கிறார். அப்போது பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. எந்த பெண்ணை அவர் வீட்டில் இறக்கி விட்டாரா அதே பெண் கார் உடைய பின்புறத்தில் சடலமாக இருக்கிறார்.

-விளம்பரம்-

இது குறித்து அவர் பிரசன்னாவிடம் சொல்கிறார். இறுதியில் யார் அந்த பெண்? எப்படி அவர் இறந்தார்? காருக்குள் அந்த பெண்ணுடைய சடலத்தை போட்டது யார்? இதற்கும் உதயநிதிக்கும் என்ன சம்பந்தம்? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் அருண் என்ற கதாபாத்திரத்தில் உதயநிதி நடித்திருக்கிறார். வழக்கம் போல இல்லாமல் இந்த படத்தில் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் உதயநிதி. அதோடு உதயநிதிக்கு பெரிய சண்டை காட்சிகள் எல்லாம் இல்லாமல் சாதாரண நபராக இயக்குனர் காட்டியிருக்கிறார்.

இவரை அடுத்து பிரசன்னா நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம். இவர்களுடன் படத்தில் வரும் சதீஷ், வசுந்தரா, ஆத்மிகா, மாரிமுத்து ஆகியோர் தங்களுடைய காட்சிகளை சிறப்பாக செய்திருக்கின்றனர். மேலும், படத்தின் உடைய தலைப்பிற்கு ஏற்ப ஒவ்வொரு காட்சியிலும் யாரை நம்புவது, யாரை சந்தேகிப்பது போன்ற பல சஸ்பென்ஸ்களுடன் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வினாடியும் பார்வையாளர்களை யோசிக்க வைக்கிறது என்றே சொல்லலாம். படத்தின் முதல் பாதி பல சுவாரசியத்துடன் செல்கிறது.

இரண்டாம் பாதி பல திருப்பங்களுடன் நகர்கிறது. மொத்தத்தில் இது ஒரு நல்ல திரில்லர் கதை படம் என்று சொல்லலாம். மேலும், குற்றம் செய்பவர்களுக்கு தண்டனை நிச்சயம் என்ற கருத்தின் அடிப்படையாக இந்த படம் உருவாகி இருக்கிறது. ஆனால், கிளைமாக்ஸ் காட்சியில் கொஞ்சம் இயக்குனர் கவனம் செலுத்தி இருக்கலாம். சித்து குமாரின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. ஆனால், ஒளிப்பதிவும், வசனங்களும் சில இடங்களில் சொதப்பிவிட்டது என்று சொல்லலாம்.

நிறைகள் :

நடிகர்களின் நடிப்பு சிறப்பு

பின்னணி இசை படத்திற்கு பக்க பலம்

கிரைம் திரில்லர் பாணியில் கதை அருமை

சஸ்பென்ஸ், சுவாரசியம் என்று அருமையாக இயக்குனர் கதையை எடுத்துச் சென்றிருக்கிறார்

குறைகள் :

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள் தான்.

கிளைமாக்ஸ் காட்சியில் இன்னும் சில விஷயங்களை மாற்றி இருக்கலாம்.

மற்றபடி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய குறைபாடுகள் எதுவும் இல்லை.

மொத்தத்தில் கண்ணை நம்பாதே- ஏமாற்றத்தை தரவில்லை

Advertisement