கண்ணான கண்ணே நடிகையா இது ? தோழிகளுடன் கொண்டாடிய New Year புகைப்படங்கள்.

0
1153
Nimisha
- Advertisement -

கண்ணான கண்ணே சீரியல் நடிகையின் புத்தாண்டு கொண்டாட்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. தற்போது சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகள் தான் இளசுகள் மத்தியில் சட்டென்று பிரபலமடைந்துவிடுகின்றனர். தொலைக்காட்சிகளில் நடித்து வரும் எத்தனையோ இளம் நடிகைகளுக்கு சமூக வலைதளத்தில் இளசுகள் ஆர்மிக்கள் கூட இருக்கிறது. மற்ற சேனல்களை விட சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு எப்போதும் இல்லத்தரசிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று விடுகிறது.

-விளம்பரம்-

சூப்பர் ஹிட் அடித்த சீரியல் :

அந்த வகையில் கடந்த சில மாதங்களாக சன் டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருக்கிறது. தெலுங்கில் பௌர்ணமி என்ற டைட்டிலில் ஒளிபரப்பாகி வந்த இத்தொடர் தெலுங்கில் இல்லத்தரசிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படி ஒரு நிலையில் தமிழில் ‘கண்ணான கண்ணே’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

- Advertisement -

கொரோனா ஊரடங்கால் சன் டிவியில் சில சீரியல்களுக்கு திடீர் என்ட் கார்டு போடப்பட்ட நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலிருந்து இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. பிரபல நடிகர் நடிகர் பப்லூ (கவுதம்) தொழிலதிபராக நடிக்கும் இத்தொடரில் அவரது மகள்களாக மீரா கதாபாத்திரத்தில் நிமிஷிகா ராதா கிருஷ்ணனும், அக்‌ஷிதா ரேவதி கேரக்டரிலும் நடித்து வருகின்றனர்.

இளசுகளை கவர்ந்த மீரா :

இவர்களுடன் நடிகர் ராகுல் ரவி, நித்யா தாஸ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இதுவரை இந்த தொடர் 356 எபிசோடுக்கு மேல் கடந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. மேலும் இந்த தொடரில் மீரா என்ற கதாபாத்திரத்தில் நிமிஷா என்பவர் நடித்து வருகிறார். மீராவாக திரையில் வரும் நிமிஷிகாவுக்கு இளைஞர்கள் கூட அதிகம் ரசிகர்களாக இருக்கின்றனர்.

-விளம்பரம்-

நிமிஷ்கா நடித்த சீரியல்கள் :

மேலும், இவருக்காகவே கண்ணான கண்ணே தொடரை பார்க்கும் இளசுகளுக்கு இருக்கிறார்கள்.இவர் ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடித்து இருக்கிறார். அது போக இவர் மலையாளத்திலும் ஒரு சில தொடர்களில் நடித்துள்ளார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது கண்ணான கண்ணே தொடர் தான்.

New Year கொண்டாட்டம் :

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நிமிஷா, அடிக்கடி புகைபடங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் நேற்று புத்தாண்டு வேறு, அதனால் சொல்லவா வேண்டும். நேற்று புத்தாண்டை தன் தோழிகளுடன் கொண்டாடி இருக்கும் நிவிஷா, கவர்ச்சியான உடைகளில் புகைப்படங்களை அள்ளி வீசி இருக்கிறார். மேலும், கண்ணாடி முன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.

Advertisement