நீச்சல் உடையில் கும்மாளம் போட்டுள்ள கண்ணான கண்ணே சீரியல் நடிகை. வைரலாகும் புகைப்படம்.

0
5663
nithya das
- Advertisement -

நீச்சல் உடையில் பயங்கரமாக போஸ் கொடுத்துள்ள சீரியல் நடிகையின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ந்து போய் உள்ளார்கள். சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை நித்யா தாஸ். இவர் மலையாள திரைப்படங்களின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானவர். அதனை தொடர்ந்து இவர் சீரியலில் நடித்து வருகிறார். தமிழில் ஷ்யாம் நடித்த ‘மனதோடு மழைக்காலம்’ என்ற படத்தின் மூலம் தான் கதநாயகியாக அறிமுகமானார். பின் தமிழில் ‘பொன் மேகலை’ போன்ற சில படங்களில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இவர் நடித்த படங்கள் மக்கள் மத்தியில் பெரிதும் வெற்றி பெறாததால் இவர் சின்னத்திரை நோக்கி பயணம் செய்து விட்டார். பெரும்பாலும் நடிகைகளுக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு குறைய தொடங்கிய உடன் சின்னத்திரை பக்கம் செல்வது தானே வழக்கம். இதில் நித்யா தாஸ் மட்டும் என்ன விதிவிலக்கா? பின் இவர் சன் டிவியில் இதயம், பைரவி ஆகிய தொடர்களில் நடித்து தமிழ்நாட்டு இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார்.

இதையும் பாருங்க : ஸ்டாலின் பேரனை வச்சி ரொனால்டோ மெஸ்ஸிக்கு சவால் விடுறாங்க – கேலி செய்த BJP பிரபலம்.

- Advertisement -

தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வரும் தொடர்களில் ஒன்றான கண்ணான கண்ணே தொடரில் யமுனா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியின் அம்மாவாக நடித்து வருகிறார். தற்போது இவருக்கு 36 வயது தான் ஆகிறது. மேலும், இவர் இரண்டு குழந்தைக்கு அம்மாவாக இருந்தாலும் கதாநாயகிகளுக்கு சமமாக இளமை ததும்பும் அழகுடன் வலம் வருகிறார். அதுமட்டுமில்லாமல் சீரியலில் பல நடிகைகள் இளம் வயதிலேயே அம்மா கதாபாத்திரத்தில் நடிப்பது வழக்கமான ஒன்று தான்.

மேலும், இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். இவர் தன்னுடைய புகைப்படத்தையும், தன் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படங்களையும் சோசியல் மீடியாவில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது நித்யா தாஸ் அவர்கள் தன் குடும்பத்துடன் தண்ணிரில் நீச்சல் உடையில் ஆட்டம் போட்ட புகைப்படம் சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த பலரும் கண்ணான கண்ணே சீரியல் யமுனாவா! என்றும் இவருடைய அழகை வர்ணிக்கும் கமண்டுகளை போட்டு வருகின்றனர்

-விளம்பரம்-
Advertisement