கண்ணாத்தா படம் முதல் சித்தி சீரியல் வரை நடித்த இந்த நடிகையை ஞாபகம் இருக்கா ? குடும்பம் குட்டின்னு எப்படி இருக்காங்க பாருங்க.

0
1281
kannatha
- Advertisement -

கண்ணாத்தாள் பட நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் எத்தனையோ பேர் குழந்தை நட்சத்திரமாக நடித்து இன்று சினிமாவில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் இவர்கள் ஒரு சிலர் குழந்தை நட்சத்திரங்களாக நடித்து அதன் பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் இருப்தால் சினிமாவை விட்டு விலகி தங்களுடைய சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகை நீனா என்பவரும் ஒருவர்.

-விளம்பரம்-

இவர் தமிழ் பட நடிகை ஆவார். இவர் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். 1990இல் இயக்குனர் வசந்த் இயக்கத்தில் வெளிவந்த கேளடி கண்மணி என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் இயக்குனர் செல்வா இயக்கத்தில் நடிகை நீலா மாலா என்ற ஒரு நாடகத்திலும் இவர் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : ‘தலையில் கிரீடம், கையில் சூலம்’ – அம்மன் கெட்டப்பில் ஷகீலாவின் தத்து மகள் மிளா நடத்திய போட்டோ ஷூட்.

- Advertisement -

நீனா திரைப்பயணம்:

பின் 1994 ஆம் ஆண்டு வெளிவந்த விடுகதை என்ற படத்தின் மூலம் நடித்து மக்கள் மத்தியில் கவனம் பெற்று இருந்தார் நடிகை நீனா. அப்படியே இவர் திரைப்படத்தில் மட்டுமில்லாமல் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருந்தார். அதிலும் நடிகை நீனா, அஜித் நடிப்பில் வெளிவந்த ராசி என்ற திரைப்படத்திலும், விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த காலமெல்லாம் காத்திருப்பேன் என்ற படத்திலும் நடித்திருந்தார்.

நீனா திருமணம்:

இப்படி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் படங்களில் நீனா நடித்து இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருந்தார். அதிலும் இவர் நடிப்பில் வெளிவந்த கண்ணாத்தாள் படம் மூலம் இவர் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருந்தார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் இவர் 2004ஆம் ஆண்டு சந்திரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

நீனா நடித்த சீரியல்:

திருமணத்திற்கு பிறகு இவர் சினிமாவில் இருந்து விலகி சின்னத்திரையில் நடித்து இருந்தார். அதிலும் இவர் நடித்த சித்தி, அண்ணாமலை போன்ற தொடர்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. பின் இவர் சின்னத்திரையில் இருந்தும் விலகி ஆஸ்திரேலியாவில் செட்டிலாகிவிட்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. அதற்குப்பிறகு என்ன ஆனார்? என்று தெரியாமல் இருந்தது.

வைரலாகும் நீனா புகைப்படம்:

இந்த நிலையில் இவருடைய புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அதில் நீனா தன்னுடைய மகனுடன் சேர்ந்தது இருக்கும் புகைப்படம். இதை பார்த்த பலரும் கண்ணாத்தாள் பட நடிகையா! அடையாளமே தெரியவில்லை என்று கமெண்ட்ஸ் போட்டும், நீனாவின் புகைப்படத்தை ஷேர் செய்தும் வருகின்றார்கள்.

Advertisement