இந்திய சினிமாவில் மிகப்பெரிய அளவில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படங்களில் ஒன்று காந்தாரா. இந்த படத்தின் இரண்டு பாகங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும், காந்தாரா
சாப்டர் ஒன் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ருக்மணி வசந்த். இதற்கு முன்பு இவர் மலையாளம், கன்னடத்தில் நடித்திருக்கிறார். தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த
மதராசி என்ற படத்திலும் ருக்மணி நடித்திருந்தார்.

இருந்தாலும் இவர் காந்தாரா படத்தின் மூலம் தான் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். இதை தொடர்ந்து இவர் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சில புகைப்படக்காரர்களால் ஏற்பட்ட விபரீதம் குறித்து நடிகை ருக்மணி வசந்த் சொல்லியிருக்கும் குற்றச்சாட்டு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பொது நிகழ்ச்சிகள், சினிமா விழாக்களில் நடிகைகள் கலந்து கொள்ளும்போது தவறான கோணங்களில், ரொம்ப அநாகரீகமான புகைப்படங்களை எடுப்பதை அனைவரும் அறிந்ததே.
ருக்மணி பேட்டி:
அந்த புகைப்படங்களை எல்லாம் சோசியல் மீடியாவில் ஆபாசமாகவும் பதிவிட்டும் இருக்கிறார்கள். இதற்கு எதிராக போட்டோ அத்துமிரல்களை கண்டித்து காந்தாரா நடிகை ருக்மணி வசந்த் கண்டித்து போட்டிருக்கும் பதிவு தான் தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், சினிமாவில் இருக்கும் நடிகைகளுடைய கண்ணியத்தை பாதிக்கும் வகையில் சில சினிமா ஊடகங்கள், சில புகைப்படக்காரர்கள் போட்டோ ஷூட்டில் எல்லை மீறி நடந்து கொள்வது ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக இருக்கிறது. பிரபலங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை படம் பிடித்து பொதுவெளியில் வெட்ட வெளிச்சமாக்கும் பாப்பரஸி கலாச்சாரம் இப்போது தென்னிந்திய திரை உலகளிலும் ஊடுருவி வருகிறது.

எச்சரிக்கை விடுத்த ருக்மணி:
இது சினிமா கலைஞர்களின் வாழ்க்கை ரொம்பவே பாதித்திருக்கிறது. நிகழ்ச்சிகள், ப்ரோமோஷனில் கலந்து கொள்ளும் நடிகைகளிடம் புகைப்பட கலைஞர்கள் வீடியோகிராபர்கள் வரம்பு மீறி நடந்து கொள்கிறார்கள். நடிகைகளுடைய உடல் பாகங்களை வேண்டுமென்று ஜூம் செய்தும் அநாகரீகமான கோணங்களில் படம் பிடித்தும் வெளியிடுகிறார்கள். இது ரொம்பவே அவமரியாதைக்குரிய செயல். இதைப் பொறுத்துக் கொள்ளவே முடியாது. இதையெல்லாம் உடனடியாக நிறுத்த வேண்டும். இனிமேல் இந்த பிரச்சனை நடக்கக்கூடாது. இதனால் நாங்கள் எல்லோருமே ஒன்றிணைந்து இருக்கிறோம். இந்த மாதிரி பிரச்சனைகளை சந்திப்பவர்களுக்கும் துணையாக நிற்போம் என்று கூறியிருக்கிறார்.






