நடிகர் விஜய் வசந்தின் தந்தையும் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பியுமான வசந்தகுமார் கொரோனா பாதிப்பால் காலமானார்

0
2046
vijayvasanth
- Advertisement -

வசந்த் அண்ட் கோ, வசந்த் தொலைக்காட்சின் நிறுவனரும் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பியுமான வசந்தகுமார் கொரோனா பாதிப்பால் உயிரிழந்து உள்ளார். இந்தியாவில் கடந்த 4, 5 மாதங்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இன்னும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தாக்கிக் கொண்டு வருகின்றது.

-விளம்பரம்-

இந்த நிலையில் பிரபல நடிகர் விஜய் வசந்தின் தந்தையும் வசந்த் அண்ட் கோ உரிமைமையாளருமான வசந்தகுமார் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். மேலும், வசந்த குமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து அவரது மனைவிக்கும் கொரோனா தோற்று ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 10- ஆம் தேதி வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களுக்கு முன் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் இன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தெரிவித்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

இந்த நிலையில் அவரது உடல் நிலை இன்று மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்ததால் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், அவர் சமீபத்தில் சிகிசை பலனின்றி உயிரிழந்து உள்ளார். வசந்த குமாரின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் நடிகர் நடிகைகளும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement