ஓவராக வாயாடி வந்த ஸ்ரீரெட்டிக்கு ஆப்பு வைத்த காமெடி நடிகர்.

0
12857
srireddy
- Advertisement -

கடந்த ஆண்டு தெலுங்கு சினிமா உலகில் பிரபலமான முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கில் பிரபலமான நடிகையான ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்பு தருவதாக தன்னை ஏமாற்றி படுக்கையை பகிர்ந்து கொண்டதாக பல நடிகர்கள் மீது குற்றச்சாட்டை எழுப்பினார். மேலும், தெலுங்கு நடிகர் மட்டுமல்லாது தமிழில் ஸ்ரீகாந்த், ராலன்ஸ் துவங்கி இயக்குனர் முருகதாஸ் வரை என பல்வேறு பிரபலங்கள் மீது பாலியல் புகார் குற்றச்சாட்டை சாட்டினார்.

-விளம்பரம்-

மேலும் அதற்காக “ரெட்டி லீக்ஸ்” என்ற போராட்டம் ஒன்றையும் உருவாக்கினார். அதுமட்டுமில்லாமல் இந்த போராட்டத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளான பல பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை நடிகை ஸ்ரீரெட்டி இடம் பகிர்ந்து கொண்டார்கள். இது அனைவருக்கும் தெரிந்ததே. தற்போது சென்னையில் செட்டில் ஆகியுள்ள ஸ்ரீரெட்டி அடிக்கடி எதாவது சர்ச்சையான விஷயத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருவார். சமீபத்தில் கூட தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் மீதும் குற்றம் சாட்டியிருந்தார். பவன் கல்யாண் மூன்று திருமணங்கள் செய்தவர். இவரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர் அரசியலுக்கு தகுதியானவர் இல்லை என்று அவரை தாறுமாறாக பேசியிருந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : இந்தியன் 2 விபத்தில் உயிர் இழந்த கார்டூனிஸ்ட் மதன் மருமகனின் மனைவி மற்றும் மகன். நெஞ்சை உருக்கும் புகைப்படம்.

இந்நிலையில் தெலுங்கு நகைச்சுவை நடிகை கராத்தே கல்யாணி அவர்கள் நடிகை ஸ்ரீரெட்டி மீது சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து உள்ளார். தெலுங்கு துணை நடிகை கராத்தே கல்யாணி மற்றும் நடன இயக்குனர் ராகேஷ் ஆகியோர் மீது அவதூறாக சோசியல் மீடியாவில் பேசி உள்ளார் நடிகை ஸ்ரீரெட்டி. இதனை தொடர்ந்து நடிகை கராத்தே கல்யாணி மற்றும் நடன இயக்குனர் ராகேஷ் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் ஸ்ரீரெட்டி மீது புகார் அளித்து உள்ளார்.

-விளம்பரம்-
Image result for sri reddy kalyani

மேலும், அந்த புகாரில் ஸ்ரீரெட்டி எங்கள் இருவரையும் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசி உள்ளதாக புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தார்கள். அத்துடன் ஸ்ரீரெட்டி பேசிய சில ஆபாச வீடியோவை ஆதாரமாக காண்பித்து உள்ளனர். இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் ஸ்ரீரெட்டி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. தெலுங்கு துறையினர் மத்தியில் பலத்த சந்தோஷப்படுவார்கள் என்று கூறப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் ஸ்ரீரெட்டி கைது செய்யப்பட நிறைய வாய்ப்புக்கள் உள்ளது என்று தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறார்கள்.

Advertisement