மீண்டும் ஒரு பையாவா.! கார்த்தியின் ‘தேவ்’ படத்தின் விமர்சனம்.!

0
1488
dev
- Advertisement -

தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து கார்த்தி நடித்துள்ள ‘தேவ்’ திரைப்படம் இன்று (பிப்ரவரி 14) காதலர் தின ஸ்பெஷலாக வெளியாகியுள்ளது. இந்த படத்தை பற்றிய விமர்சனத்தை தற்போது காணலாம்.

-விளம்பரம்-

படம்:- தேவ்
இயக்குனர்:- ரஜத் ரவிசங்கர்
நடிகர்கள் : – கார்த்தி, ராகுல் ப்ரீத் சிங், ஆர் ஜே விக்னேஷ், ரம்யாகிருஷ்ணன், பிரகாஷ் ராஜ் மற்றும் பலர்,
தயாரிப்பு பிபின், – பிரின்ஸ் பிக்சர்ஸ்
இசையமைப்பளார் :-  ஹரிஷ் ஜெயராஜ்
வெளியான தேதி:-14-02-2018

- Advertisement -

கதைக்களம்:

படத்தின் கதாநாயகனானா கார்த்தி ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். மேலும், மிகவும் வசதியான குடும்ப பின்னனி கொண்ட நம்ப ஹீரோ ஒரு அட்வன்ச்சர் பிரியார். இதனால் வீட்டின் கராஜ் முழுக்க விலை உயர்ந்த பல்வேறு கார் மற்றும் பைக்குகளை வாங்கி குவித்து வைத்திருக்கிறார்.

-விளம்பரம்-

என்னதான் வசதி படைத்த குடும்பத்தை சார்ந்த ஒரு பையனாக இருந்தாலும் ஹீரோவிற்கு சாகசம் என்றால் மிகவும் பிடிக்கும். தனது வாழ்க்கையை சாகசம் நிறைந்த ஒரு த்ரில்லான வாழ்க்கையாக மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வருகிறார் நம்ம ஹீரோ. அப்போது தான் கதான்யாகியான ராகுல் ப்ரீத் சிங்கை முக நூலில் பார்க்கிறார்.

ஹீரோவிற்கு நிகராக மிகவும் வசதி படைத்த ஒரு வெளிநாட்டு வாழ் இந்தியராக இருந்து வருகிறார் நம்ம கதாநாயகி. ஆனால், கார்த்திக்கு நேர் மாறாக வாழக்கையை மிகவும் நேர்த்தியாக வாழும் ராகுல் ப்ரீத் சிங் ஒரு நிறுவனத்தின் CEO வாக (சர்கார் படத்தில் விஜய் போன்று) இருந்து வருகிறார். மேலும், ஆண்கள் மீது எந்த ஒரு விருப்பமும் இல்லாமல் வாழ்க்கையில் வாழ்ந்து வருகிறார்.

இப்படி ஏதிர்மறையான கோணத்தில் வாழ்க்கையை அணுகும் இருவருக்கும் இடையே காதல் மலர்கிறது(அதான தமிழ் சினிமா லாஜிக்) பின்னர் விட்டுக்கொடுத்து போகும் ஹீரோவாக நம்ம கார்த்தியும், கொஞ்சம் திமிரான நம்ம ராகுலும் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டு பின்னர் சேர்ந்துகொள்வது என்று இருந்து வருகின்றனர். இப்படியே போனால் படத்தில ட்விஸ்ட் எங்க என்று கேட்கும் போது தான் ராகுல் ப்ரீத் சிங்கிற்கு இருக்கும் பிரச்சனை கார்த்திக்கிடம் வருகிறது. பின்னர் கடைசியில் ராகுல் ப்ரீத் சிங்கும், கார்த்திக்கின் காதலில் என்ன பிரச்சனை வருகிறது இருவரும் சேர்ந்தார்களா இல்லையா என்பது தான் இந்த படத்தின் கதை.

ப்ளஸ் :

இந்த படத்தில் ப்ளஸ் என்று சொல்ல வேண்டும் என்றால் திரைக்கு பின்னால் இருப்பவர்களை தான் சொல்ல வேண்டும். ஹரிஷ் ஜெயராஜ் இசை, வேல்ராஜின் ஒளிப்பதிவு (முக்கியமா எவரெஸ்ட் மலை ஏறும் காட்சி) போன்றவைகளை மட்டும் தான் சொல்ல வேண்டும் மற்றபடி படத்தில் சொல்லிக்கொள்ளும்படி எந்த ப்ளஸும் இல்லை. முதல் பாதி ஓகே என்று சொல்லலாம்.

மைனஸ் :

படத்தின் முக்கிய மைனஸ் படத்தின் கதை மற்றும் திரைக்கதை தான். புது இயக்குனர் என்பதை நிரூபித்திருக்கிறார் இயக்குனர் ரஜத். படத்தின் பாடல்கள் சற்று கேட்கும்படி பாகவதர் படத்தில் வருவது போல பிட்டு பிட்டாக நிறைய இடத்தில் பாடல் வருவது கொஞ்சம் காண்டாகிறது.

ரம்யாகிருஷ்ணன், பிரகாஷ் போன்ற நடிகர்களுக்கு சொல்லிக்கொள்ளும்படி இடமளிக்கவில்லை. ஆர் ஜே விக்னேஷின் சிரிக்க வைக்க மிகவும் கஷ்டபட்டுள்ளார். படத்தின் இரண்டாம் பாதியெல்லாம் நிச்சயம் பொறுமை வேண்டும். ஏன்னெனில் படம் 2.40 நேரம் ஓடுகிறது.

இறுதி அலசல் :

இந்த படம் ஒரு சாகசம் நிறைந்த படமா என்றால் இல்லை. சரி, ரொமான்டிக்கான முழு நீள காதல் படமா என்றாலும் அதுவும் இல்லை. இந்த படத்தை கிட்டதட்ட பையா பட பாணியில் எடுக்க நினைத்துள்ளார் இயக்குனர். என்ன அதில் கார் இதில் எல்லாம் இருக்கிறது இருப்பினும் படத்தில் சுவாரசியம் தான் இல்லை. மொத்தத்தில் இந்த படம் காதலர்களுக்கு வேண்டுமானால் கொஞ்சம் பிடிக்கலாம். ஆனால், நம்மை போல சிங்கிள் பசங்களுக்கு இந்த படம் கொஞ்சம் மொக்க தான் பாஸ். மொத்தத்தில் இந்த படத்திற்கு நம் Behindtalkies-ன் மதிப்பு 5.5/10.

Advertisement