“காதெல்லம் உன் குரலா கேக்குயா” – குணசேகரனை எண்ணி அழுத கரிகாலன்.

0
1427
- Advertisement -

மாரடைப்பால் காலமானார் மாரிமுத்து என்கிற ஆதி குணசேகரன் இல்லாததால் அவருக்கு பதில் யார் என்று குழப்பத்தில் கதை எவ்வாறு நகர்த்துவது  குழப்பத்தில் அந்த கதாபாத்திரம் வீட்டை விட்டு வெளியேறியதாக காட்டியுள்ளார்.  எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் டிஆர்பியில் உச்சத்தில் இருக்கும் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். தற்போது இந்த சீரியல் தான் பட்டிதொட்டி எங்கும் பிரபலம். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த சீரியல் அடக்கு முறைக்கு உட்படும் பெண்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்கி வருகிறார். மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். மேலும், அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல், அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். ஜனனி அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். சில மாதங்களாகவே சீரியலில் சொத்து ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது.

சீரியலின் கதை:

சொத்துக்கள் மொத்தம் ஜீவானந்தம் பெயரில் மாறிவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆதி குணசேகரன் ஜீவானந்தத்தை பழிவாங்க போலீசாக இருக்கும் கிள்ளிவளவனை சந்தித்து ஜீவானந்தத்தை போட்டு தள்ள திட்டம் போட்டார்கள். பின் ஜீவானந்தம் மனைவி கயிலை சுட்டு விடுகிறார்கள். தன் மனைவிய இழந்த சோகத்தில் ஜீவானந்தம் உடைந்து விடுகிறார். மேலும், கண்விழித்த அப்பத்தா ஜீவானந்தத்திற்கு உறுதுணையாக நின்று குணசேகரனின் மீது கேஸ் கொடுக்கிறார். இன்னொரு பக்கம், ஜீவானந்தத்தின் மனைவி கயலை கொன்றது குணசேகரன் மற்றும் கதிர் என்று வீட்டில் உள்ள பெண்கள் எல்லோருக்கும் தெரிய வருகிறது.

-விளம்பரம்-

இன்றைய கதை:

மாரிமுத்து அவர்கள் மாரடைப்பால் உயிரிழந்ததால் அவரிடத்தில் யாரையும் உண்ணும்  பூர்த்தி  செய்யவில்லை என்பது நன்றாக தெரிகிறது. இதற்கு இடையே எதிர் நீச்சல் நாடகத்தின் ஆதி குணசேகரன் கடிதம் எழுதி வைத்துவிட்டு வெளியேறியதாக கதை நகர்கிறது தம்பிகள் ஞானம் கதிர் மற்றும் மாப்பிள்ளை கரிகால மூவரும் விம்பு விம்பி அழுகிறார்கள் குறிப்பாக கரிகால “எங்கையா போன உன்னை  புரிஞ்சக்காதவர்களுக்கு நீ புதிர் யாபுரிஞ்சுகிட்ட எனக்கு நீ உயிர் யா காது எல்லாம் உன் குரல் கேட்கிறது யா” என்று அவர் அழும்போது அனைவரும் முன்னிலையில் அவர் வந்து போல தோன்றுகிறது.

Advertisement