எப்படி இருக்கிறது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ – முழு விமர்சனம் இதோ.

0
1204
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் விக்னேஷ் சிவன். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகர், திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்குகிறார். தற்போது இவர் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கலா மாஸ்டர் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளர்கள். இப்படத்தினை தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்து உள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பல எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் இன்று வெளியாகியுள்ளது. இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி- நயன்தாரா- விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியாகியுள்ள படம் காத்துவாக்குல 2 காதல். இந்த படத்தில் ராம்போ எனும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஒரு சாதாரண ஐஸ்கிரீம் கூட கிடைக்காத அளவுக்கு அதிஷ்டம் இல்லாத ஒரு கதாபாத்திரத்தில் இவர் நடித்திருக்கிறார். விஜய் சேதுபதி பிறந்த உடனே அப்பா இறந்து விடுகிறார், அம்மா படுத்த படுக்கையாகி விடுகிறார். மேலும், விஜய் சேதுபதி தன் அம்மாவைப் பார்க்கப் போனால் அவரது உடலும் மேலும் மேலும் மோசமடைகிறது என்று சொல்லிவிடுகிறார்கள்.

- Advertisement -

அதனால் தன் அம்மாவை பார்ப்பதையே விஜய் சேதுபதி விட்டுவிடுகிறார். மழை பெய்யும் போது இவர் வெளியே போனால் அந்த மழை கூட நின்றுவிடுகிறது. இப்படி எதுவும் கிடைக்காமல் துரதிஸ்டவசமாக விஜய் சேதுபதி இருக்கிறார். இந்த நிலையில் இவருடைய வாழ்க்கையில் சமந்தா, நயன்தாரா இருவரும் வருகிறார்கள். இருவரையுமே விஜய் சேதுபதி காதலிக்கிறார். இறுதியில் இருவருமே விஜய்சேதுபதிக்கு கிடைத்தார்களா? இல்லையா? விஜய்சேதுபதியின் வாழ்க்கையில் வேற என்ன மேஜிக் நடந்தது? என்பதே படத்தின் மீதி கதை.

வழக்கம் போல் விஜய் சேதுபதி படத்தில் மிரட்டி இருக்கிறார். காதல், பாசம், வெறுப்பு என அனைத்திலும் ஸ்கோர் செய்து இருக்கிறார். கண்மணியாக நடித்த நயன்தாரா அவர்கள் தம்பி, தங்கையை வளர்க்கும் ஒரு தாயாக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கடன் தொல்லையால் பல நெருக்கடியில் இருக்கிறார். பின் ஓலா டாக்சி டிரைவராக வேலை செய்யும் விஜய்சேதுபதியுடன் நயன்தாராவுக்கு நட்பு ஏற்படுகிறது. பகலில் கால் டாக்ஸி டிரைவராகவும், இரவில் பார் ஒன்றில் ஜிம்பாயாகவும் பணியாற்றி வருகிறார் விஜய் சேதுபதி. இரவு நேரத்தில் பாரில் ஜிம்பாய்யாக இருக்கும் பொழுது சமந்தாவின் நட்பு கிடைக்கிறது.

-விளம்பரம்-

அப்படியே சமந்தா, நயன் இருவரையும் விஜய் சேதுபதி காதலிக்கிறார். இறுதியில் நிகழ்ச்சியில் கண்மணியா? கதீஜாவா? இருவரில் யாரை காதலிக்கிறார் என்று கேட்கும்போது அப்போதுதான் விஜய் சேதுபதி ஐ லவ் யூ டூ என்று சொல்கிறார். மேலும், சமந்தாவும், நயன்தாராவும் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பது தான் கதையின் செம ட்விஸ்ட். பாடல்கள் மட்டுமின்றி அனிருத்தின் பின்னணி இசையும் பட்டையை கிளப்பி இருக்கிறது. விக்னேஷ் சிவன் திரைக்கதைக்கு ரொம்பவே மெனக்கட்டு எழுதி இருப்பதை படம் பார்க்கும்போது தெரிகிறது. பல இடங்களில் காமெடிகள் பக்காவாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

அதை விட உணர்ச்சிகரமான தருணங்கள் பார்ப்போரை கண் கலங்க வைத்திருக்கிறது. இருந்தாலும் ஒருவருக்காக இரண்டு பெண்கள் அடித்துக் கொள்ளும் காட்சிகள் கொஞ்சம் ஆடியன்சை வெறுப்பேற்றி இருக்கிறது. நானும் ரவுடிதான் படத்தில் இருந்த நயன்தாராவிற்கு இந்த படத்தில் வரவேற்பு கொஞ்சம் குறைவு என்று சொல்லலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீரா படத்தை தற்போது இருக்கும் காலகட்டத்திற்கு ஏற்றவாறு இயக்குனர் இயக்கி இருக்கிறார். கண்டிப்பாக இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பிடிக்கும். ஒரு பக்கா என்டர்டெயின்மென்ட் படமாக காத்துவாக்குல இரண்டு காதல் உள்ளது.

நிறைகள் :

நடிகர்கள் தங்கள் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

படம் முழுக்க முழுக்க காமெடி ரொமான்டிக் பாணியில் உள்ளது.

அனிருத்தின் பாடலும், பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலம்.

மூவருமே ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு அசத்தி இருக்கிறார்கள்.

திரைக்கதை இயக்குனர் கொண்டு சென்ற விதம் அருமை.

குறைகள் :

ஒருவருக்காக 2 பேர் அடித்துக் கொள்வது ஆடியன்சை கொஞ்சம் வெறுப்பேற்றி இருக்கிறது.

சில இடங்களில் லாஜிக் குறைபாடுகள் ஏற்பட்டாலும் நடிகர்கள் மேனேஜ் செய்து விட்டார்கள்.

மற்றபடி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த ஒரு பெரிய குறைபாடும் இல்லை.

மொத்தத்தில் ரசிகர்கள் காசு கொடுத்து பார்ப்பதற்கு வீண்போகவில்லை என்று சொல்லலாம். காத்துவாக்குல இரண்டு காதல் – ஒரு ஜாலியான படம்

Advertisement