3 மாசம் நடிச்சேன், இவ்ளோ சம்பளம் கொடுத்தாங்க,அதுவும் அக்கா புள்ள சடங்கிற்கு செலவாகிடிச்சி – கர்ணன் பட குதிரைக்கார சிறுவன்

0
1079
Karnan
- Advertisement -

‘பரியேறும் பெருமாள்’ படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகி இருந்தது. ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது.

-விளம்பரம்-

மேலும், பண்டாரத்தி பாடல் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இந்த படத்தின் பாடல் வரிகளில் சில மாற்றங்களையும் செய்தார் மாரி செல்வராஜ். இப்படி வெளியாகும் முன்னரே பல சர்ச்சைகளை சந்தித்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. 1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் கிராமத்தின் மீது காவல்துறை கொடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதில் பலர் கொல்லப்பட்டனர். பல கிராமங்கள் சூறையாடப்பட்டன.

- Advertisement -

மூன்று நாட்களில் 25 கோடி :

தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். இந்தப் பின்னணியை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது ‘கர்ணன்’ இந்த படத்திலும் வழக்கம் போல தனுஷ் தனது நடிப்பில் மிரட்டியுள்ளார். கொரோனா பிரச்சனை காரணமாக தமிழ் நாட்டில் திரையரங்குகளில் மீண்டும் 50 சதவிகித கட்டுப்பாடு என பல அச்சுறுத்தல்கள் இருந்தாலும் அதையெல்லாம் மீறி, கர்ணன் படம் முதல் மூன்று நாட்களில் 25 கோடி வரை வசூல் சாதனை செய்தது.

கர்ணன் குதிரைக்கார சிறுவன் :

இந்நிலையில் இந்த படத்தில் சில காட்சிகளில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் அதிகம் கவர்ந்த ஒரு சில கதாபாத்திரங்களில் ஓன்று தான் குதிரைக்கார சிறுவன். இந்த கதாபாத்திரத்தில் காளி என்ற சிறுவன் அசலாக கிராமத்தில் உள்ள சிறுவனை போல தத்ரூபமாக தனுஷிடம் பேசுவது, குதிரைகளை பார்த்துக்கொள்வது, இறுதிக்காட்சியில் போலீஸ் அடிக்கும் போது அவற்றை தாங்கிக் கொண்டு கர்ணனை அழைத்து சொல்வது என மிக சிறப்பாக நடித்திருந்தார்.

-விளம்பரம்-

ஒன்றரை லட்சம் சம்பளம் :

அந்த மாதிரியான இந்த சிறுவனை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அதிலும் இவர் குதிரை மீது சாவாரி செய்யும் காட்சிகளுக்கு கிளாப்ஸ் பறந்தது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் உண்மையிலேயே குதிரை ஓட்ட தெரிந்தவர். மேலும், இவர் ஒரு சில சீரியலில் கூட நடித்துள்ளாராம். இந்நிலையில் இவர் கர்ணன் படத்தில் இவரின் நடிப்பிற்காக ஒன்றரை லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டது.

ஆனால் கர்ணன் படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை, சமூக வலைத்தளங்களிலும் தென்படவில்லை. இந்நிலையில் தான் பிரபா ஊடகம் ஓன்று இந்த சிறுவனை பேட்டி எடுத்திருந்தது. அதில் காளி கூறியதாவது “கர்ணன் படத்தில் நடித்து வந்த பணத்தை தன்னுடை சகோதரி மகளின் சடங்கிற்கு செலவு செய்து விட்டதாகவும், தற்போது எந்த வேலையும் இல்லாமல் இருப்பதாகவும், படங்களில் வாய்ப்புக்கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார். இந்த தகவல் வைரலான நிலையில் பலரும் இவருக்கு வாய்ப்புகள் கிடைப்பதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement