கர்ணன் படத்தில் இருந்த வரலாற்று தவறை திருத்திய படக்குழு – என்ன தெரியுமா ? இதோ புகைப்படம்.

0
19894
karnan

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன் (ஏப்ரல் 9) வெளியாகி இருந்தது. ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது. மேலும், பண்டாரத்தி பாடல் சில சர்ச்சைகளை ஏற்படுத்தியதால் இந்த படத்தின் பாடல் வரிகளில் சில மாற்றங்களையும் செய்தார் மாரி செல்வராஜ். இப்படி வெளியாகும் முன்னரே பல சர்ச்சைகளை சந்தித்த இந்த திரைப்படம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

இந்த படம் வெளியாகும் முனரே பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இப்படி ஒரு நிலையில் இந்த திரைப்படம் புதிய அரசியல் சர்ச்சை ஒன்றையும் ஏற்படுத்தி இருந்தது. அதாவது கொடியன்குளம் கலவரம் நடந்ததும், உயிர்கள் பறிக்கப்பட்டதும் 1995-ஆம் ஆண்டில். அப்போது ஜெயலலிதா முதல்வராக இருந்தார். ஆனால், 1998-ல் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது கொடியன்குளம் கலவரம் நடந்ததாக கர்ணனில் காண்பிக்கப்படுகிறது எனவும், இது வரலாற்றை திரித்து கூறும் செயல் எனவும் சில விமர்சகர்கள் அதிருப்தி தெரிவித்தனர். 

இதையும் பாருங்க : தனது இரண்டாம் திருமணத்தில் விஷ்ணு விஷால் எடுத்த அதிரடி முடிவு – பரவாயில்ல நல்லது தான்.

- Advertisement -

அதே போல 1997- ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது போக்குவரத்து கழகங்களுக்கு வரலாற்று நாயகர்களின் பெயர்களை சூட்டியபோது, மாவீரன் சுந்தரலிங்கனார் பெயர் வைத்த பேருந்துகளில் ஏற மாட்டோம் என ஆதிக்க சாதியினர் கலவரம் செய்தனர். சுந்தரலிங்கனார் பெயரை மாற்றியே ஆக வேண்டிய சூழல் ஏற்பட்ட போது, அவரது பெயரை மாற்றி அவருக்கு இழுக்கு சேர்க்க மாட்டேன் என்று ஒட்டு மொத்தமாக அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் சூடிய பெயர்களை மாற்றினார் கருணாநிதி என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜெயலலிதா ஆட்சியில் நடந்த கலவாரத்தை எப்படி கலைஞர் ஆட்சியில் நடந்தது போல காண்ப்பிக்கலாம் என்று பலர் குற்றச்ட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் அந்த தவறை இன்னும் இரண்டு நாட்களில் திருத்திக்கொள்வதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளதாக உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். அவர் சொன்னது போலவே, முன்பு கர்ணன் படத்தில் ‘1997 முன் பகுதி’ என்று குறிப்பிடபட்டிருந்த விஷயத்தை தற்போது ’90 களின் பிற்பகுதியிலிருந்து ‘ என்று படக்குழுவினர் மாற்றியுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement