ஜெய் ஸ்ரீராம் கோஷத்திற்கு மத்தியில் ஒற்றை ஆளாக சென்று ‘அஃலாஹூ அக்பர்’ கோஷமிட்ட மாணவி. வைரல் வீடியோ.

0
748
hijab
- Advertisement -

முஸ்லிம் மாணவி ஒருவரை மாணவர்கள் சுற்றி வளைத்து கோஷம் எழுப்பிய சம்பவம் தற்போது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் பெரும்பாலான கல்லூரிகளில் இஸ்லாம் மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து இந்துத்துவா மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. முஸ்லீம் மாணவர்கள் ஹிஜாப் அணிந்தால் இந்துத்துவா மாணவர்களும் காவிநிற துண்டு அணிந்து வருவோம் என்று கூறி இந்துத்துவா மாணவர்கள் போராட்டம் செய்திருக்கிறார்கள். இதனால் கர்நாடகாவில் இருக்கும் சிவமொக்கா, உடுப்பி, மங்களூர், சிக் மங்களூர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள பியு கல்லூரிகளில் இந்த மோதல் ஆர்ப்பாட்டமாக நிலவியிருக்கிறது.

-விளம்பரம்-

மேலும், இந்த விவகாரத்தை கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது. அதில் மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி கேட்டு தொடுத்த மனு மற்றும் அதற்கு எதிராக தொடுக்கப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் கர்நாடக முதல்வர் பஸவ்ராஜ் பொம்மை பேட்டி ஒன்று அளித்து இருக்கிறார். இது குறித்து அதில் அவர் கூறியது, கோர்ட்டில் இது சம்மந்தமான வழக்கு நடக்கிறது. அதுவரை மாணவ, மாணவியர்கள் தங்கள் யூனிஃபார்மில் தான் கல்லூரிக்கு செல்ல வேண்டும். இதில் கோர்ட் என்ன முடிவு எடுக்க வேண்டுமோ அதை எடுக்கும் என்று கூறி இருக்கிறார். இதை தொடர்ந்து உயர்நீதிமன்ற நீதிபதி வழக்கு விசாரணையின்போது கூறியிருப்பது,

- Advertisement -

உயர்நீதிமன்ற நீதிபதி கூறியது:

இந்த வழக்கை சட்டப்படி விசாரிப்போம். இதில் உணர்வுகளை பற்றி யோசிக்கக் கூடாது. நமது அரசியலமைப்பு சட்டம் என்ன சொல்லி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். மேலும், நமது அரசியலமைப்பு சட்டத்தின் படி தான் நாங்கள் வழக்கு விசாரணை நடத்துவோம். ஆனால், இதனால் தினமும் நாட்டில் நடக்கும் மாணவர்களுக்குள் நடக்கும் பிரச்சனையை பார்க்கும்போது அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் இருக்கிறது என்று கூறி தான் இருந்தார். இந்த நிலையில் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப் புராவில் ஒரு கல்லூரியில் மாணவிகள் பர்தா அணிந்து வர தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்து இருக்கிறார்கள்.

இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்ததால் ஏற்பட்ட விளைவு;

இருந்தாலும் பியூ கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்ததை எதிர்க்கவில்லை. மாறாக அவர்களை வகுப்பிற்குள் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். ஆனால், இவர்கள் இந்துத்துவா மாணவர்கள் இருக்கும் வகுப்புகளில் இருக்க அனுமதிக்கப் படவில்லை. அதற்கு மாறாக, இஸ்லாமிய மாணவிகள் மட்டும் தனி வகுப்புகளில் அமர வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் இவர்களுக்கு வகுப்புகளும் எடுக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் கர்நாடகாவில் சிவமொக்காவில் உள்ள அரசு பியு கல்லூரி ஒன்றில் இந்துத்துவா மாணவர்களுக்கும், இஸ்லாமிய மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

-விளம்பரம்-

இந்துத்துவா- இஸ்லாமிய மாணவர்களுக்கு இடையே மோதல் :

இந்துத்துவா மாணவர்கள் முழுவதும் கரகோஷம் செய்து போராட்டம் நடத்தி வந்தார்கள்.
அப்போது ஏற்பட்ட கலவரத்தில் இஸ்லாமிய மாணவிகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மாணவிகள் காயம் அடைந்த நிலையில் இந்துத்துவா 2 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். பின் உடனடியாக போலீஸ் வந்து லத்தி சார்ஜ் நடத்தி மாணவ, மாணவியரை அப்புறப்படுத்தினர். இருந்தும் குந்தாபுராவில் உள்ள பியூ கல்லூரி ஒன்றில் இஸ்லாமிய மாணவி ஒருவரை இந்துத்துவா மாணவர்கள் சுற்றி வளைத்து கோஷம் எழுப்பி இருக்கிறார்கள். பின் இந்துத்துவா மாணவர்கள் சுற்றி வளைத்து ஜெய்ஸ்ரீராம், ஜெய்ஸ்ரீராம் என்று கரகோஷம் செய்து இருக்கிறார்கள்.

எதிர்த்து நின்ற முஸ்லீம் மாணவி:

யாரையும் பார்த்து பயப்படாமல் தனியாக நின்று இருக்கிறார். உடனே அந்த இஸ்லாமிய மாணவி தனியாக நின்று கையை உயர்த்தி கோஷம் எழுப்பி எனக்கு பயம் இல்லை என்பதை சத்தமாக கோஷம் போட்டு இருக்கிறார். இப்படி மாணவி செய்த விஷயம் தற்போது வீடியோவாக சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது இந்தப் பிரச்சனை இந்தியா முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமில்லாமல் மதரீதியாக கல்லூரி மாணவர்கள் இப்படி மோதிக்கொள்ளும் சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு அரசாங்கம் சார்பில் என்ன பதில் வரப்போகும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement