ஜாதி படத்துல எதுக்கு நடிச்சீங்க – மெட்ராஸ் படம் குறித்து செய்தியாளர் கேள்வியால் கடுப்பான கார்த்தி

0
530
- Advertisement -

ஜப்பான் படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில் கார்த்திக் கூறியிருக்கும் கருத்து தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த வருபவர் நடிகர் கார்த்தி. இவரது நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் சூப்பர் சூப்பர் ஹிட் அடித்து இருக்கிறது. அந்த வகையில் கடந்த வருடம் இவரது நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் ஆகிய மூன்று படங்களுமே ஆட்ரிக் வெற்றி அடைந்தது.

-விளம்பரம்-

அதோடு கார்த்தி அவர்கள் வித்தியாசமான கதைக்களத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும், பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஜப்பான். இந்த படத்தை ராஜமுருகன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்து வருகிறார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்து இருக்கிறது.

- Advertisement -

ஜப்பான் படம்:

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி இருக்கிறது. மேலும், இது கார்த்தியின் 25வது படம் ஆகும். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்திருக்கிறார். இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இன்று இந்த படத்தினுடைய பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதில் பட குழுவினர் கலந்து கொண்டிருந்தார்கள்.

கார்த்தி அளித்த பேட்டி:

அப்போது நடிகர் கார்த்திக், ராஜ் முருகன் சாருடன் படம் பண்ண வேண்டும் என்று ஆசைப்பட்டு தான் முதலில் கதை கேட்டேன். அவருடைய ஹியூமர் சைட் இந்த படத்தில் சரியாக அமைந்திருக்கிறது. அவருடைய எழுத்து எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருடைய கூக்கு படமும் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. இந்த மாதிரி நல்ல எழுத்தாளர்கள் சினிமாவில் படம் பண்ண வேண்டும். இதற்கு முன்னாடி யாரிடமும் நான் எனக்காக ஒரு கதையை எழுதுங்கள் என்று கேட்டதே கிடையாது. ஆனால், நான் இவரிடம் போய் உரிமையாக எனக்காக எழுதுங்கள் என்று கேட்டேன்.

-விளம்பரம்-

ஜப்பான் படம் குறித்து சொன்னது:

மேலும், அவருடன் பணியாற்றிய அனுபவம் சிறப்பாக இருக்கிறது. நிறைய விஷயங்களை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். ஒரே மாதிரி படங்களை பண்ணுவதற்கு சலிப்பாக இருக்கிறது. அதனால் தான் வேறு வேறு பாணியில் படங்களில் நடிக்கிறேன். அதே போல் நான் மெட்ராஸில் வளர்ந்தவன். எனக்கு ஜாதி எல்லாம் தெரியாது. அப்படி வளர்ந்தவன் நான். மெட்ராஸில் வளர்ந்தவர்களுக்கு ஜாதி எல்லாம் தெரியாது. யாரோடு பழகினாலும் அவருடைய பெயரை மட்டும் கேட்போம்.

மெட்ராஸ் படம் குறித்து சொன்னது:

அவ்வளவுதான் அதை தாண்டி ஜாதி பற்றி எல்லாம் பேசிக் கொள்ள மாட்டோம். மெட்ராஸ் படத்தில் நான் நடித்ததற்கு காரணம் ஒரு சுவரை வைத்து பேசப்பட்ட அரசியல் மற்றும் அதை வைத்து உருவாக்கப்பட்ட கதை பிடித்திருந்தது. அதுமட்டுமில்லாமல் சுவாரஸ்யமாக இருந்தது. அதனால்தான் நான் மெட்ராஸ் படத்தில் நடித்தேன். மெட்ராஸ் எனக்கு ஜாதி படமாக தெரியவில்லை என்று பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement