திருந்தாத ஜென்மம் விஜய் – லியோ பட ட்ரைலரை பார்த்து விட்டு கடுப்பாகி ராஜேஸ்வரி போட்ட பதிவு

0
938
- Advertisement -

தமிழ் சினிமாவில் தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுவர் விஜய். இவர் நடிப்பில் வெளியான அணைத்து படங்களுமே பெரிய அளவில் ஹிட் அடித்திருக்கிறது. விமர்சனம் ரீதியாக அடி வாங்கினாலும் வசூல் ரீதியில் எப்போதுமே வெற்றி பெற்று வருகிறது. இந்நிலையில் விஜய் தற்போது தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் லீயோ படத்தில் நடித்து இருக்கிறார். மேலும் இந்த படம் LCU யூனிவர்சிற்குல் வரும் என்று கூறப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகிஇருக்கிறது. பொதுவாக விஜய் படங்கள் என்றாலே சர்ச்சையில் சிக்குவது வழக்கமான ஒன்றி தான். அந்த வகையில் இந்த பட ட்ரைலரில் விஜய் பேசிய கெட்ட வார்த்தை தான் பெரும் சர்ச்சையை தற்போது ஏற்படுத்தி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் இதனை கண்டித்து ராஜேஸ்வரி பெரிய பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

- Advertisement -

அதில் ‘லியோ ட்ரைய்லர் பார்த்தேன். விஜய் சுயநினைவோடுதான் நடித்தாரா? விஜய் கெட்ட வார்த்தை பயன்படுத்தியுள்ளது(1.46 நிமிடத்தில்)அவரது தரத்தை மிகவும் குறைத்துள்ளது. பெண்களை இழிவு செய்யும் வார்த்தை விஜய்க்கு வசனமா?திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்? விஜய். ரசிகர்களை தவறாக வழிநடத்தும் விஜய்க்கு எமது கடுமையான எதிர்ப்பினை தெரிவித்து கொள்கிறேன்.

லோகேஷ் கனகராஜ் தகுதி இல்லாத இயக்குனர். திரைப்படத் துறை முன்வந்து இதனை எதிர்க்க வேண்டும் என்று செவன் ஸ்க்ரீன் தயாரிப்பு நிறுவனத்தையும் tag செய்துள்ளார். ஏற்கனவே “நா ரெடி” பாடலானது கடந்த ஜூன் 22ஆம் தேதி விஜய்யின் பிறந்தநாளன்று வெளியானது. இந்த பாடலை விஜய்யே பாடியிருந்தார், இதனால் பாடல் வெளியான போது யூடியூபில் ட்ரெண்டாகி இருந்தது.

-விளம்பரம்-

ஆனால் இந்த பாடலில் புகைபிடிக்கும் படியான கட்சிகளும், மது அருந்துவதை பற்றிய வாசகங்களும் இடம்பெற்றிருந்தது சமூக ஆர்வலர்கள் இடையே பெரும் எதிர்ப்பை உருவாக்கியது. மேலும் பாமாக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும் விஜய் இந்த மாதிரியாக விஜய் புகைபிடுக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்த விமர்சனங்களை தொடர்ந்து “நா ரெடி” பாடலில் மது அருந்துவது உடல் நலத்திற்கு கேடு என்ற வாசகத்தை இடம்பெற செய்தனர் படக்குழுவினர். அப்போது கூட ராஜேஸ்வரி தம்மால் தான் இந்த மற்றம் ஏற்பட்டது என்று பெருமையாக கூறிக்கொண்டார். பின்னர் லியோ படம் பற்றி பேசாமல் இருந்த ராஜேஸ்வரி தற்போது ட்ரைலரை பார்த்து மீண்டும் கொதித்து எழுந்துள்ளார்.

Advertisement