தன் அண்ணனுக்காக கார்த்தி செய்த செயல்..! மனமுறுகிய சூர்யா..! என்ன செய்தார் தெரியுமா..?

0
976
surya

தமிழ் சினிமா நடிகர்களில் பிரபலமாக இருந்துவரும் சகோதரர்களான சூர்யா மற்றும் கார்த்திக் இருவருமே சினிமாவில் கலக்கி வருகின்றனர். இதில் கார்த்திக் தற்போது இயக்குனர் பாண்டியராஜன் இயக்கி வரும் “கடைக்குட்டி சிங்கம் ” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

karthik

நடிகர் சூர்யாவின் 2D என்டேர்டைன்மெண்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில், நடிகர் கார்த்திக்குக்கு ஜோடியாக “வனமகன்” பட நாயகி ஷேய்ஷா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தின் இரண்டாவது நாயகியாக “மேயாதமான் ” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார்

இவரின் அண்ணனான நடிகர் சூர்யா ஏற்கனவே “சிங்கம்” என்ற படத்தில் நடித்துள்ளார். அதானல் அவரது தம்பியான நடிகர் கார்த்திக், வீட்டின் கடைக்குட்டி என்பதால், இந்த படத்திற்கு “கடைக்குட்டி சிங்கம் ” என்று பெயர் வைத்தார்களோ என்று ரசிகர்கள் நினைத்து வருகின்றனர்.

devdev

இந்த படத்திற்கு பிறகு நடிகர் கார்த்திக் பிரின்ஸ் பிக்ச்சர் தயாரிப்பில், இயக்குனர் ரஜத் ரவிசங்கர் இயக்கவுள்ள ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம். இந்த படத்திற்கு சூர்யாவின் மகன் பெயரான “தேவ் ” என்ற பெயரை வைத்துள்ளனராம். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடிக்கப்போகிறாராம். மேலும் இந்த படத்தில் பிரகாஷ் ராஜ் , ரம்யா கிருஷ்ணன், நவரச நாயகன் கார்த்திக் போன்ற பிரபலங்களும் இருக்கின்றனர்.