எப்படி இருக்கிறது கார்த்தியின் ‘சர்தார்’ – முழு விமர்சனம் மற்றும் மக்கள் கருத்து இதோ.

0
708
sardar
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் கார்த்திக். தற்போது கார்த்தி நடிப்பில் இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கிய பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் சர்தார். இந்த படத்தில் கார்த்தி, ராஷிகா கண்ணா, ரஜியா விஜயன்,லைலா, முனீஸ்காந்த் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி இருக்கும் கார்த்தியின் சர்தார் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி அடைந்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் இரட்டை வேடத்தில் கார்த்திக் நடித்திருக்கிறார். அதில் அப்பா கார்த்தி ராணுவ உளவாளியாக இருக்கிறார். ஆனால், அவர் தேசத்துரோகி என இந்திய அரசால் அறிவிக்கப்படுகிறார். இதனால் அவருடைய ஒட்டுமொத்த குடும்பமும் தற்கொலை செய்து கொள்கிறது. பின் பையன் கார்த்தியை அவருடைய சித்தப்பா முனீஸ்காந்த் தான் வளர்க்கிறார். வளர்ந்த கார்த்தியும் போலிஸ் அதிகாரியாக மாறுகிறார். பெரிய அளவில் பிரபலமாக வேண்டும் என்று துடிக்கும் கார்த்திக்கு ஒரு கேஸ் கிடைக்கிறது.

- Advertisement -

இதனிடையில் தண்ணிர் ப்ரச்சனை சம்பவம் நிகழ்கிறது. நோய்வாய் பட்ட சிறுவனாக ரித்து நடித்திருக்கிறார். அவருடைய அம்மாவாக லைலா வருகிறார். தன்னுடைய மகனுக்கு ஏற்படும் பிரச்சனைக்கு தண்ணீர் காரணம் இல்லை, வாட்டர் பாட்டிலில் தான் பிரச்சனை என்று சொல்கிறார். தன்னுடைய மகனுக்கு பாதிப்பு ஏற்பட்டதை நினைத்து லைலா வருத்தப்படுகிறார். தண்ணீர் பிரச்சனைக்கு எதிராக பல விஷயங்கள் செய்கிறார். இறுதியில் மகன் கார்த்தி எடுக்கும் கேஸ் அவருடைய அப்பா சர்தார் இடமே கொண்டு செல்கிறது.

உண்மையில் சர்தார் கார்த்திக் செய்த தவறு என்ன? அவர் ஏன் தேச துரோகியாக அறிவிக்கப்பட்டார்? குற்றவாளியில் இருந்து தன் அப்பாவை மகன் காப்பாற்றினாரா? தண்ணிர் பிரச்சனை என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை. படத்தில் கார்த்திக் அவர்கள் அப்பா சர்தார் மற்றும் மகன் போலீஸ் ஆகிய இரட்டை வேடத்தில் மிரட்டி இருக்கிறார். இவரை அடுத்து படத்தில் வரும் பிற நடிகர்களும் தங்களுடைய வேலையை சரியாக செய்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

தண்ணீர் பிரச்சனையை கையில் எடுத்து இயக்குனர் கதையைக் கொண்டு சென்ற விதம் சிறப்பாக இருக்கிறது. இன்னொரு பக்கம் இந்தியா – பாகிஸ்தான் பிரச்சனையை காண்பித்து கதையை விறுவிறுப்பாக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர். ஆனால், சில காட்சிகள் முந்தைய படங்களின் பிரதிபலிப்பாக இருக்கிறது. ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு பக்க பலம் சேர்த்திருக்கிறது. படத்தில் லைலா உடைய கம்பேக் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது.

விறுவிறுப்பாக கொண்டு சென்று சில இடங்களில் இயக்குனர் சுதப்பிவிட்டார் என்று சொல்லலாம். இரண்டாம் பாதியில் சில சலிப்பான காட்சிகளையும், காதல் பாடல்களையும் தவிர்த்து இருந்தால் சர்தார் படம் இன்னும் அட்டகாசமாக இருந்திருக்கும். மொத்தத்தில் இந்த தீபாவளிக்கு அனைவரும் குடும்பத்துடன் சென்று பார்க்கும் படமாக சர்தார் இருக்கிறது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

நிறைகள் :

கார்த்தியின் நடிப்பு

பின்னணி இசையும், ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம்.

கதைக்களம்

குறைகள் :

ஆங்காங்கே சில இடங்களில் சலிப்பைத் தட்டி இருக்கிறது.

இரண்டாம் பாதியில் இன்னும் விறுவிறுப்பு காட்டி இருக்கலாம்.

காதல் பாடல்களை தவிர்த்திருக்கலாம்.

மொத்தத்தில் கார்த்தியின் சர்தார் – தீபாவளிக்கு சரவெடியா இருக்கும் என்று கூறப்படுகிறது.

Advertisement