ரஜினி சார் சொன்னது எனக்கு அப்போ புரியல,இப்போ புரியுது – ‘PS 2’ இசை விழாவில் கார்த்தி

0
616
karthi
- Advertisement -

பொன்னியின் செல்வன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி குறித்து கார்த்தி பேசிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மணிரத்னம். இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுத்து இருந்தார்.

-விளம்பரம்-
ponniyin

இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருந்தனர். மேலும், படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து இருந்தார். இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியாகி இருந்தது.

- Advertisement -

பொன்னியின் செல்வன் படம் :

இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை பொன்னியின் செல்வன் ரசிகர்கள் பலரும் மிகவும் எதிர்பார்த்து வருகிறார்கள். இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி வெளியாகும் என்று படக்குழு ஏற்கெனவே அறிவித்து இருக்கிறது. இதனிடையே கடந்த 20 ஆம் தேதி, பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் பாடலான ‘அக நக’ பாடல் வெளியானது. ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இசை வெளியீட்டு விழா:

மேலும், இந்த பாடல் யூடியூப் ட்ரெண்டிங்கிலும் இடம்பெற்று இருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. இந்த இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், நடிகர் சிம்பு, இயக்குனர் பாரதிராஜா, நடிகர் கமலஹாசன் போன்ற பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்த இசை வெளியீட்டு விழாவில் கார்த்திக் கூறியிருந்தது, சினிமா என்பது வாழ்க்கையை அழகாக்கும் ஒரு விஷயம். அது எல்லா நாட்டிலும், எல்லா ஊரிலும் கிடைப்பது கிடையாது.

-விளம்பரம்-

விழாவில் கார்த்தி சொன்னது:

ஒருமுறை நான் வெளிநாட்டிற்கு சென்ற போது ஈரான் நாட்டைச் சேர்ந்த ஒரு இயக்குனர் என்னிடம், இந்தியாவில் எல்லோரும் காசு கொடுத்து தியேட்டரில் வந்து சினிமா பார்க்கிறார்களா? என்று ஆச்சரியமாக கேட்டார். இப்படி சினிமா என்று ஒரு விஷயம் நமக்கு கிடைத்தது ஒரு பொக்கிஷம். மேலும், கொரோனா தொற்று பாதித்த பின்னர் நாம் எல்லோருமே மிக மகிழ்ச்சியுடன் தியேட்டரில் சென்று சினிமாக்களை பார்க்கிறோம். அதிலும், குறிப்பாக தமிழ் சினிமாவில் எனக்கு ஒரு சின்ன இடம் கொடுத்த ரசிகர்கள் உங்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சோழர்கள் கொடி எல்லா இடத்திலும் பறந்தது போல இந்த படமும் இதுவரை ரிலீஸ் ஆகாத இடத்திலும் சென்று ரிலீசாகிறது என்பதை நினைக்கும் போது எங்களுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. அப்படி ஒரு சாதனை செய்ய உதவி செய்தது நீங்கள் தான்.

படம் குறித்து சொன்னது:

பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் ரோல் பண்ணுகிறாயா? என்று மணிரத்தினம் சார் கேட்டார். நான் உடனே யோசிக்காமல் எந்த கதாபாத்திரம் என்றாலும் செய்வேன் என்று சொன்னேன். பின் அவரிடம் பேசி முடித்துவிட்டு நான் காரில் வரும்போது எனக்கு மனதில் ஒரு மருதநாயகம் போல் தோன்றியது. சிவாஜி சார் அவர்களின் வசனம் கூட என் மனதில் தோன்றியது. ஆனால், நான் இந்த படத்தில் முதல் காட்சியில் தம்பி விடு என்ற வசனம் பேசும்போது பலமுறை டேக் வாங்கினேன். அப்போதுதான் எனக்கு பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் ரஜினி சார் சொன்ன கதை எனக்கு புரிந்தது. மேலும், நான் இந்த படத்தில் திரிஷாவை முதன்முதலில் பார்க்கும் காட்சியை கல்கி அவர்கள் பல பக்கங்களுக்கு வர்ணித்து எழுதி இருப்பார். ஆனால், மணி சார் அந்த காட்சியை ஒரு சில நிமிடத்தில் காண்பித்து இருப்பார். இந்த படத்தை மணி சார் தவிர வேறு யாராலும் என்று முடியாது என்று அப்போது தான் எனக்கு புரிந்தது என்று பல விஷயங்களை கூறியிருந்தார்.

Advertisement