தனுஷ் படத்தில் வாய்ப்பு தருவதாக தனது பெயரை பயன்படுத்தி வாட்ஸ்அப் மூலம் மோசடி. நம்பரை பகிர்ந்து இயக்குநர் எச்சரிக்கை.

0
785
karthiknarean
- Advertisement -

தமிழ் சினிமாவில் இளம் இயக்குனராக நுழைந்து பட்டைய கிளப்பி கொண்டு இருப்பவர் கார்த்திக் நரேன். இவர் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த துருவங்கள் பதினாறு படம் மக்கள் மத்தியில்பிரபலமானவர். தற்போது இவர் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘மாஃபியா’. இந்த படத்தில் அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மாஃபியா படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று இருந்தது. கார்த்திக் நரேன் சில படங்களை இயக்கியிருந்தாலும் விரைவாக மக்கள் மத்தியில் பிரபலமானர்.

-விளம்பரம்-

இந்நிலையில் கார்த்திக் நரேன் பெயரை பயன்படுத்தி மர்ம நபர் ஒருவர் மோசடி செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது கார்த்திக் நரேன் அவர்கள் தனுஸை வைத்து ஒரு புதிய படத்தை இயக்குகிறார். இது தனுஷின் 43வது படம். தற்போது கொரோனா லாக்டவுனில் முதற்கட்ட பணிகள் தொடங்கி உள்ளது. இந்த படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்க உள்ளது. மேலும், இந்த படம் திரில்லர் படமாக உருவாக உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்த படத்திற்கு நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது என கூறி மர்ம நபர்கள் நடிக்க வைப்பதாக சொல்லி பணம் கேட்டு மோசடி செய்து உள்ளார்கள். இது குறித்து இயக்குனர் கார்த்திக் நரேன் அனைவரையும் எச்சரித்துள்ளார். இது பற்றி அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருப்பது, முக்கியமான தகவல் – என்னுடைய பெயரை பயன்படுத்தி ஒருவர் வாட்ஸப்பில் போலியாக காஸ்டிங் கால் ஒன்றை பதிவிட்டு உள்ளார்.

இந்த தகவல் எனக்கு தெரிய வந்து உள்ளது. 9777017348 என்ற வாட்சப் நம்பரில் பேசும் அந்த நபர் என்னுடைய அடுத்த படத்தில் நடிக்க வைப்பதாக சொல்லி பணம் கேட்டு ஏமாற்றி வருகிறார். இந்த நம்பரில் இருந்து ஏதாவது மெசேஜ் வந்தால் அதை பிளாக் செய்து போலீசில் புகார் செய்யுங்கள் என கோபத்துடன் கூறியுள்ளார். கார்த்திக் நரேன் அவர்கள் D-43 படத்திற்காக மலையாள சினிமாவை சேர்ந்த திரைக்கதை எழுத்தாளர்கள் ஷார்ஃபு மற்றும் சுஹாஸ் இருவருடனும் சேர்ந்து பணியாற்றி வருகிறார். இந்த படத்திலும் நடிகர் பிரசன்னா ஒரு முக்கிய ரோலில் நடிக்க உள்ளார். ஜி.வி.பிரகாஷ் தான் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement