தமிழ் நாடு அல்ல, ஆசியாவிலேயே முதல் பெண் ஓட்டுநர் இவர் தான் – ஷர்மிளா விவகாரத்தில் அவர் கொடுத்த அறிவுரை.

0
2654
Vasanthakumari
- Advertisement -

பெண் ஓட்டுனர் ஷர்மிளா விளம்பரத்திற்காக தான் இதையெல்லாம் செய்கிறார் என்று ஆசியாவின் முதல் ஓட்டுனர் வசந்த் குமாரி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. சில மாதங்களாகவே சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருந்தவர் கோவை ஷர்மிளா. இவர் கோவை தனியார் பேருந்தில் பெண் டிரைவராக புகழ் பெற்றவர். இவருடைய தந்தை ஆட்டோ மூலமாகத்தான் இவர் ஓட்டுநர் தொழிலை கற்றுக் கொண்டார், தன்னுடைய தந்தை ஆசையை நிறைவேற்றுவதற்காக இவர் கனரக வாகனங்களை ஓட்ட பழகினார்.

-விளம்பரம்-

பின் போராடி தனியார் பேருந்தில் டிரைவர் ஆனார். கொஞ்ச நாட்களிலேயே இவர் மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் அடைந்தார். ஷர்மிளாவின் இந்த முயற்சி அனைவர் மத்தியிலும் பாராட்டப் பெற்றிருந்தது. அது மட்டும் இல்லாமல் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலருமே இவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள். சமீபத்தில் கூட பாஜக எம்.எல்.ஏ வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் ஷர்மிளா எம்..எல்ஏ பேருந்தில் ஏறி சிறிது நேரம் பயணித்து அவரிடம் கலகலப்பாக பேசி பாராட்டியும் இருந்தார்.

- Advertisement -

பெண் ஓட்டுனர் ஷர்மிளா குறித்த தகவல்:

பின் திமுக துணை பொதுச் செயலாளரும் எம்பியுமான கனிமொழி அவர்கள் ஷர்மிளா ஓட்டிய பேருந்தில் பயணித்திருந்தார். அப்போது அவர் சர்மிளாவை கட்டி அணைத்து பாராட்டி கைக்கடிகாரம் ஒன்றையும் பரிசாக அளித்திருக்கிறார். பின் கண்ரக்டருக்கும் ஷர்மிளாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அங்கு பெண் கண்டக்டர் ஒரு மாதிரியாக பேசுகிறார் நான் ரிலீவ் ஆகிக்கொள்கிறேன் என்று சர்மிளா ஏற்கனவே கூறியிருக்கிறார்.

ஷர்மிளா விவகாரம்:

ஆனால், பிரச்சனையின் போது கேட்டபோது மேனேஜர் அப்படியெல்லாம் அவர் கூறவில்லை என்று சொல்லி இருக்கிறார். பின் தன்மானம் தான் முக்கியம் என்று ஷர்மிளா வேலையை விட்டு வெளியேறினார். இது தொடர்பாக பேட்டியும் அளித்து இருந்தார். இதை அடுத்து பலரும் ஷர்மிளாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தார்கள். ஷர்மிளா வேலையை விட்டு நின்ற விவகாரம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பேசும் பொருளாக இருக்கிறது.

-விளம்பரம்-

ஓட்டுனர் வசந்தகுமாரி அளித்த பேட்டி:

இந்நிலையில் இது தொடர்பாக ஆசியாவின் முதல் பெண் ஓட்டுனர் வசந்தகுமாரி அளித்திருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஆசியாவின் முதல் பெண் அரசு போக்குவரத்து கழக ஓட்டுநர் வசந்த்குமாரி. இவர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர். ஷர்மிளாவின் விவகாரம் குறித்து இவர் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், பொதுவாகவே பெண்கள் வேலை செய்யும் இடங்களில் அமைதியாக வேலை செய்ததால் தான் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேற முடியும். விளம்பரத்திற்காக வேலை செய்தால் அது நம்மை முன்னேற்றாது.

ஷர்மிளா குறித்து சொன்னது:

நாம் பணிபுரியும் தரத்தை வைத்து தான் மற்றவர்கள் நமக்கு விளம்பரம் செய்வார்கள். கோவை பெண் ஓட்டுனர் ஷர்மிளா விவாகரத்தை பார்க்கும்போது அவர் சுய விளம்பரத்திற்காக தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் அவரை ஈடுபடுத்தி இருக்கிறார். அதே நேரம் ஒரு பெண் ஓட்டுனர் என்ற விஷயத்தில் திமுக எம்பி கனிமொழி செய்தது பாராட்டக்கூடிய ஒன்று. அதனால் கனிமொழிக்கு ஏற்பட்ட நெருக்கடி வருத்தத்துக்குரியது. ஆனால், அவர் இதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவருடைய செயலை மனமாற பாராட்டுகிறேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement