ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலில் கார்த்திகை தீபம் ஒன்று. கார்த்திக்-தீபா திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் இடையே பல பிரச்சனைகள் வந்தது. இருந்தாலுமே இவர்கள் இடையே இருந்த காதல் அதிகமானது. ஒரு கட்டத்தில் எதிரிகள் தீபாவை கொலை செய்ய முயன்றார்கள். இருந்தும் போராடி கார்த்திக் அவரை காப்பாற்ற பார்த்தார். ஆனால், தீபா இறந்து விடுகிறார். இதனால் கார்த்திக் குடும்பமே கதறி அழுகிறது.

கடந்த சனிக்கிழமை தீபாவின் மறைவுடன் முதல் சீசன் முடிவுக்கு வந்தது. தற்போது புதிய கதைக்களத்துடன் கார்த்திகை தீபம் சீரியல் தொடங்குகிறது. இன்றைய எபிசோடில், ஒரு ஊரில் பெரிய அரண்மனை வீடு இருக்கிறது. காலம் காலமாக இந்த ஊரில் கோவில் ஒன்று பூட்டப்பட்டு இருக்கிறது. இதனால் மழை இல்லாமல் ஊர் மக்கள் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறார்கள். அந்த ஊரின் பெரிய மனுஷன் ராஜா சேதுபதி.
கார்த்திகை தீபம்:
ஊர் மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கோவிலை திறக்க வேண்டும் என்று ராஜா சேதுபதியிடம் முறையிடு இருக்கிறார்கள். அப்போது ராஜசேதுபதி, பூஜை அறையில் சாமியை வணங்கி கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் அவரின் பாட்டி பரமேஸ்வரி இடம் ஒரு பெண்மணி, யாரோ ஒருவர் பெரிய சம்பட்டியை வைத்து கோவில் பூட்டை உடைத்து இருக்கிறார்கள். இதனால் கோவில் திறக்கப்படுகிறது.

இன்றைய எபிசோட்:
அப்போது கோவிலில் இருந்து ஒளி வருகிறது என்று தன் கண்ட கனவை பரமேஸ்வரி சொல்கிறார். பின் எல்லோரும் கோவிலை திறக்க கோவில் அருகே திரண்டு இருக்கிறார்கள். அங்கு விருமன், உங்க இஷ்டத்துக்கு எப்படி கோவிலை திறக்க முடியும், மூட முடியும்? இது என்ன உங்க வீட்டு சொத்தா? இல்ல உங்க வீட்டுக்கு பீரோவா? என கேள்வி எழுப்பி பிரச்சனை செய்கிறார்.
கோவில் விவகாரம்:
பின் சிலர், உங்க பையன் வந்தால் தான் கோவிலை முறையாக திறக்க முடியும் என்கிறார்கள். இதனால் ராஜசேதுபதி கோவிலை திறக்க முடியாமல் அங்கிருந்து கிளம்ப பார்க்கிறார். உடனே அங்கு வந்த ஒருவன், பெரிய சம்பட்டி எடுத்து கோவில் பூட்டை அடித்து உடைத்து திறக்கிறான். எல்லோரும் ஷாக் ஆகிறார்கள். கடைசியில் அந்த கோவிலை திறந்தது கார்த்திக் தான் என்பது தெரிய வருகிறது.

கார்த்திக் என்ட்ரி:
கார்த்திக்கின் என்ட்ரி செம மாஸாக இருக்கிறது. யாரும் செய்ய முடியாததை கார்த்திக் செய்து முடித்து இருக்கிறார். இனி அடுத்து என்ன நடக்கும்? கார்த்திக் யார்? கார்த்திக்கும் இந்த குடும்பத்திற்கும் என்ன சம்பந்தம்? கார்த்தியின் முடிவால் அடுத்து நடக்கப் போவது? என்ற பரபரப்பில் கார்த்திகை தீபம் சென்று கொண்டு இருக்கிறது.






