சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனர் அருள் சரவணன் நடிப்பு மற்றும் தயாரிப்பில், ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் தி லெஜன்ட் திரைப்படத்திற்கு ஹாரிஷ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். மிக பிரம்மாண்டமான பொருட் செலவில் இசையமைத்திருக்கிறார். எடுக்கப்பட்டிருக்கும் திரைப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகின. இந்த நிலையில் படத்தை ஜூலை மாதம் வெளியிட பட குழுவினர் திட்டமிட்டிருந்தனர். அதற்கான வேலைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் தி லெஜன்ட் திரைப்படம் ஜூலை 28ஆம் தேதி திரையரங்குகள் வெளியாகியது. தமிழில் தயாரான இந்த படம் தற்போது தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியானி பான் இந்திய படமாக மாறியுள்ளது.
இந்த படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஹீரோ என அறிமுகமாகும் அருள் சரவணன் இதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்துள்ளார். ஆனால் படம் வெளியாகி தற்போது கலவையான விமர்சனங்களை சந்தித்துவருகிறது. இந்த கடையின் உரிமையாளர் அருள் சரவணன், தனது கடையின் விளம்பரங்களில் ஹன்சிகா தமன்னா போன்ற முன்னணி நடிகைகளுடன் தோன்றி நடித்தார். இதனால் அவரை பலரும் உருவ கேலி செய்து கலாய்த்து தள்ளினர்.
தி லெஜெண்ட் படம்:
அதைப்பற்றி எல்லாம் கண்டுகொள்ளாத சரவணன் அடுத்த கட்டமாக படங்களில் நடிக்கும் ஆசையில், சரவணா ஸ்டோர்ஸ் ப்ரோடக்ஷன்ஸ் என்ற பெயரில் தானே ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி “தி லெஜெண்ட்” என்ற படத்தில் நடித்தார். சமீபத்தில் அந்த படத்தின் டீசர் ட்ரெய்லர் என வெளியாகி முப்பது மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்று கொண்டிருந்த நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இந்த நிலையில் இன்று உலகம் முழுவதும் 2500 தியேட்டர்களிலும் தமிழகத்தில் மட்டும் 800 தியேட்டர்களிலும் ஐந்து மொழிகளில் இந்த படம் வெளியாகி உள்ளது. படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் காலை நான்கு மணி காட்சிகள் எல்லாம் சுமார் 650 தியேட்டர்கள் நிரம்பி வழிந்தன.
தி லெஜன்ட் படத்தில் முதல் நாள் வசூல் :-
பான் இந்திய திரைப்படமாக 5 மொழிகளில் வெளியான தி லெஜண்ட் திரைப்படம் முதல் நாளில் தமிழ்நாடு முழுவதும் 1.5 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளதாகவும், உலகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக முதல் நாளில் 2 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வார இறுதி நாட்களில் தி லெஜண்ட் படத்துக்கு வரும் வசூலை பொறுத்துத்தான் அதன் வெற்றித் தோல்வி முடிவாகும் என்கின்றனர்.
லெஜண்ட்டுக்கு ஆதரவு கொடுத்த நடிகர் :
மேலும் படத்தில் ஹரிஸ் ஜெயராஜின் இசை மற்றும் வேல்ராஜூன் ஒளிப்பதிவை தவிர மற்ற எதுவும் சிறப்பாக இல்லை என்று ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். அதே போல பிரபல விமர்சகர்களான ப்ளூ சட்டை மாறன், பிரசாந்த் போன்ற பலர் இந்த படத்தை கழுவி ஊற்றி வரும் நிலையில் இந்த படம் குறித்து நடிகர் கார்த்திக் குமார் தனது விமர்சனத்தை கொடுத்து இருக்கிறார். அதில் ‘நேற்றுதான் லெஜெண்ட் திரைப்படத்தில் பார்த்தேன். எனக்கு அதில் எந்த குறையும் தெரியவில்லை.
நடிகர் கார்த்திக் குமார் கூறியது:
அதற்கு முக்கிய காரணம் இது போன்ற பல மாஸ் கமர்சியல் மற்றும் குடும்பங்கள் கொண்டாடும் தமிழ் படங்களை பார்த்திருக்கிறேன் 4 சண்டை 4 பாடல்கள் கொஞ்சம் காமெடி, சொம்பு தூக்கும் துணை நடிகர்கள் என பலர் இருப்பார்கள். ஆனால், ஹீரோமட்டும் நடிக்க மாட்டார். அதனால் என்ன அவர் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுடைய திறமையை வளர்த்துக் கொள்வார். அவரை படத்தில் பார்த்துவிட்டு திரையரங்கில் மக்கள் கேலி செய்து சிரிப்பதை பார்க்கும்போது மக்கள் எப்படி சர்வாதிகாரத்துடன் இருக்கிறார்கள் என்று தான் தோன்றியது. என்று பதிவிட்டுள்ளார்.