தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்று தந்திருக்கின்றது. அந்த வகையில் தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் விஜய் நடிக்கிறார். இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல், கௌதமேனன், பிரியாமணி உட்பட பாபி நடித்து இருக்கிறார்கள். பிரபலமான தயாரிப்பு நிறுவனமான KVN தான் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. இந்த படம் ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

இதை அடுத்து ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. இதனால் படம் வெளியாக தாமதமாகுவதால் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்திருந்தது. மேலும், நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதற்கான தீர்ப்பு ஜனவரி ஒன்பதாம் தேதி வழங்கப்படும் என்று நீதிபதி அறிவித்திருந்தார். இதை அடுத்து படத்தினுடைய ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக படத்தினுடைய தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. சென்சார் சான்றிதழ் கிடைக்க தாமதமாவதற்கெல்லாம் காரணம் அரசியல் ரீதியாக நடக்கும் பழிவாங்கல் செயல் என்றெல்லாம் சிலர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
ஜனநாயகன் சர்ச்சை:
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் போட்ட பதிவில், சினிமா பிரியராக என்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன். குறைந்த பட்ஜெட் சுயா தீன படமான சல்லியர்கள் படத்திற்கு திரையரங்கில்லை. சென்சார் தாமதம் காரணமாக விஜய் சார் போன்ற பெரிய நட்சத்திரம் நடித்த ஜனநாயகன் படத்திற்கு ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. இன்னொரு பெரிய பட்ஜெட் படமான பராசக்தி படத்தை நாளை மறுதினம் வெளியாகுவதாக அறிவித்திருக்கிறார்கள். ஆனால், சான்றிதழ் பிரச்சனை காரணமாக புக்கிங் இன்னும் வெளியாகவில்லை. இது சினிமாவுக்கு கடினமான காலமாக இருக்கிறது.
https://www.youtube.com/watch?v=4nF7tBn0GvI
கார்த்திக் சுப்புராஜ் பதிவு:
திரையரங்குகள் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்படும் சுயாதீன படங்களுக்கு அதிக ஆதரவு அளிக்க வேண்டும். காரணம் பெரிய சேட்டிலைட் மற்றும் ஓடிடி நிறுவனங்கள் சுயா தீன படங்களை வாங்க ஆர்வம் காட்டுவது கிடையாது. குறைந்த பட்ஜெட் படங்களின் வருமானத்திற்கு திரையரங்குகள் ஒரு ஆதாரமாக உள்ளது. குறைந்த பட்ஜெட் படங்களுக்கு திரையரங்கங்கள் கொடுக்காமல் இருப்பது உண்மையிலேயே சினிமாவை கொல்லும் செயல். பெரிய பட்ஜெட் படங்களுக்கு சென்சாருக்கான கடுமையான காலகட்ட விதிகளை பின்பற்றுவது கடினமான ஒன்று.
View this post on Instagram
சினிமா நிலை:
தற்போதைய இந்திய மற்றும் வெளிநாட்டு சென்சார் கால விதிகளின்படி படத்தை முழுமையாக மூன்று மாதங்களுக்கு முன்பே முடிப்பதுதான் வெளியீடு சிறந்தது. இது பல காரணங்களால் சாத்தியமற்றது. இதை சீரமைத்து படைப்பாளிகளுக்கு சற்று எளிதாக வேண்டும். இல்லை எனில் பண்டிகை தேதிகளில் பெரிய படங்களின் ஒத்திவைப்பு தொழிலை அழித்து விடும். தயவு செய்து திரைப்பட சமூகத்தில் உள்ள அனைவரும், ரசிகர் போர்கள், அரசியல் காரணங்கள், வெறுப்புப் பிரச்சாரங்களை ஒதுக்கி வைத்து விட்டு ஒன்றிணைந்து நேர்மறையானதை செய்து கலையை காப்பாற்றுவோம். சினிமாவை காப்பாற்றவும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.






