ட்விட்டர் என்பது வேறு.! இது தான் உண்மை.! பேட்ட மற்றும் விஸ்வாசம் குறித்து கார்த்திக் சுப்புராஜ்.!

0
955
Karhik-subburaj

கடந்த சில நாட்களாகவே பேட்ட மற்றும் விஸ்வாசம் படத்தின் வசூல் தான் சமூக வலைதளத்தில் ஹாட் டாப்பிக்காக சென்று கொண்டிருக்கிறது. பேட்ட படத்தை விட விஸ்வாசம் படம் தான் அதிக வசூல் செய்து வறுவதாக தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் பேட்ட மற்றும் விஸ்வாசம் படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ் பேட்டியளித்துள்ளார்.

இதுகுறித்து பேசியுள்ள அவர், இரண்டு படத்தையும் வசூல் ரீதியாக ஒப்பிடுவது தேவையில்லாத வியாபாரநோக்கமாக தான் எனக்கு தெரிகிறது.ஒரு திரைப்படம் என்பதை கலையாக தான் பார்க்க வேண்டுமே தவிர வசூலை வைத்து விவாதத்தை வைப்பது சிறந்த விடயம் இல்லை என்று கூறியுள்ளார்.

இதையும் படியுங்க : விஸ்வாசம் எப்படி 125 கோடி வசூல்.!Kjr நிறுவனர் ஓபன் பேட்டி.! 

- Advertisement -

Read more at: https://tamil.behindtalkies.com/did-viswasam-really-collected-125-crore/

இரண்டு திரைப்படத்தையும் வசூல் ரீதியாக ஒப்பிடுவது தவறு. உங்களுக்கு பிடித்தால் படத்தை பாருங்கள் இல்லை என்றால் பார்க்காதீர்கள். நான் பேட்ட படத்தை ரசிகர்கள் கொண்டாடுவதை நேரசியாக பார்த்தேன் இந்த படம் ரசிகர்களுக்கு பிடித்துள்ளது.

-விளம்பரம்-

ட்விட்டர் என்பது வேறு ஒரு உலகம் ட்விட்டரில் வரும் செய்திகள் வேறு நடைமுறையில் வரும் செய்திகள் வேறு. திரையரங்கில் என்ன நடக்கிறது என்பது தான் முக்கியம் ஏனெனில் அங்கு தான் உண்மையான ரசிகர்கள் இருக்கின்றனர் என்று கூறியுள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.

Advertisement