ரஜினி மற்றும் தல குறித்து பதிவிட்ட கார்த்திக் சுப்புராஜ்.! வறுத்தெடுத்து வரும் அஜித் ரசிகர்கள்.!

0
568
Karthik-Subbaraj

தமிழ் சினிமாவில் பீட்சா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். 2012 ஆம் ஆண்டு இவர் இயக்கிய முதல் படமான பீசா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதன் பின்னர் ஜிகர்தண்டா, இறைவி, மெர்குரி போன்ற பல படங்களை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் இறுதியாக சூப்பர் ஸ்டாரை வைத்து படத்தை இயக்கியிருந்தார்.

பேட்டை திரைப்படம் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஸ்வாசம் திரைப் படத்திற்கு போட்டியாக வெளியிடப்பட்டது இந்த இரு படங்கள் வெளியான போது இருதரப்பு ரசிகர்கள் மத்தியிலும் அடிக்கடி சமூகவலைதளத்தில் வாக்குவாதம் நடைபெற்று கொண்டே தான் இருந்தது. மேலும், வேட்டை படத்தை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தான் ஒரு தீவிர ரஜினி ரசிகர் என்பதை அடிக்கடி நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார்.

- Advertisement -

இதையும் படியுங்க : இவரல்லவா அக்மார்க் தமிழ் நடிகை.! நைட்டியில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நிவேதா பெத்துராஜ்.!

இந்த நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சன் தொலைக்காட்சியில் ‘பேட்ட ‘ திரைப்படம் திரையிடப்பட்டது அந்த சமயத்தில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று கொண்டிருந்தது. அந்தப் போட்டியில் தோனியின் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.

-விளம்பரம்-

சென்னை அணி வெற்றி பெற்றதையடுத்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில் தலைவர் மற்றும் தல(தோனி) ஆட்டம் ஒரே சமயத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. தல தோனி என்றும் லெஜண்ட் என்று பதிவிட்டு இருந்தார். தோனியை தல என்று குறிப்பிட்டதால் அஜித் ரசிகர்கள் கார்த்திக் சுப்பராஜ் பெற்ற இழுத்துப் பிடித்து வருகின்றனர்

Advertisement