அவளுக்கு நீளமான முடி இருக்கும், நான் தான் அவளுக்கு Boy Cut பண்ணிவிட்டேன். அதற்கு காரணம் இதான் – கருணாஸ் சொன்ன காரணம்.

0
295
karunas
- Advertisement -

தமிழ் சினிமா துறை உலகில் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர் கருணாஸ். இவர் தமிழ் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இசை அமைப்பாளரும் ஆவார். அதுமட்டுமல்லாமல் இவர் தமிழக அரசியல் வாதியும் ஆவர். மேலும்,நடிகர் கருணாஸ் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள குருவிக்கரம்பை என்னும் கிராமத்தில் 1970 ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் தமிழ் சினிமா திரை உலகில் 2001 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘நந்தா’ படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானர். இந்த ஒரு படத்திலேயே மக்களிடையே பரவலாக பேசப்பட்டார்.

-விளம்பரம்-

பின்னர் கருணாஸ் அவர்கள் வில்லன், புதிய கீதை, திருமலை, குத்து, பிதாமகன், திருடா திருடி உள்ளிட்ட பல படங்களில் தன்னுடைய நகைச்சுவை திறனை காண்பித்து உள்ளார். மேலும்,இவருடைய நடிப்பு திறனுக்காக பல விருதுகளை பெற்று உள்ளார். அதிலும் இவர் நடித்த அம்பாசமுத்திரம் அம்பானி படத்தின் மூலம் மக்களிடையே பயங்கர வரவேற்பை பெற்றார். இவர் சினிமா துறையில் பின்னணி பாடகி கிரேஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

இது மட்டுமல்லாமல் கிரேஸ் அவர்கள் “திண்டுக்கல்லு திண்டுக்கல்லு.., ஒத்தகல்லு ஒத்தகல்லு மூக்குத்தியாம்..” போன்ற பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். அதிலும் முக்கால்வாசி பாடல்கள் குத்து பாடல்கள் தான். இவர் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சினிமா பாடல்களைப் பாடியுள்ளார். மேலும், தனுஷ் நடித்த திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் ஷ்ரேயாவின் தோழியாகவும் நடித்து இருந்தார். ஆனால், இவர் பெரிய அளவு பிரபலமாகவில்லை.

கிரேஸ் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிந்த கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் காமெடி நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். இவர் பாடிய கிறிஸ்தவ பக்தி பாடல்கள், குத்து பாடல்கள் மற்றும் கிராமிய பாடல்கள் அனைத்தும் பிரபலமானவை.மேலும், இவரை இந்த அளவிற்கு பிரபலம் ஆனது விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சியின் மூலம் தான். நடிகர் கருணாஸ் –கிரேஸ் ஆகிய தம்பதியினருக்கு ஒரு மகள், மகன் உள்ளார்கள். மேலும், மகள் பெயர் டயானா மற்றும் மகன் பெயர் கென்.

-விளம்பரம்-

இவர் தனுஷ் அவர்களின் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த ‘அசுரன்’ படத்தில் நடிகர் கருணாஸ் அவர்களின் மகன் கென் நடித்துஇருந்தார். அதுமட்டும் இல்லாமல் கருணாஸின் மகன் கென் நடிப்பை பார்த்து பல பேர் பாராட்டினார்கள். கிராஸ் அவர்கள் எப்போதும் பாப் கட்டிங் லுக்கில் தான் இருந்து வருகிறார். ஆனால், இவரது இந்த லுக்கிற்கு காரணம் கருணாஸ் தானாம்.

இதுகுறித்து பேசி இருக்கும் கருணாஸ் ‘திருமணத்திற்கு முன்னர் அவளுக்கு நீளமான முடி இருந்தது ஆனால் நான் தான் வெட்டி விட்டு விட்டேன். Boy Cut பண்ணால் தான் பெண்களுக்கு ஒரு தைரியமும் தன்னம்பிக்கையும் வரும். எனக்காக சொந்த அப்பா அம்மாவையே விட்டு வந்தவன் என்று புரிந்து கொள்வதற்கு எனக்கு ஒரு ஆண்டுகள் ஆகியது ‘ என்று கூறியுள்ளார்.

Advertisement