‘அமரன்’ காஷ்மீர் மக்களின் நிஜ வாழ்க்கையை பேசவில்லையா? நடிகர் உமைர் சொன்ன விஷயம்

0
239
- Advertisement -

காஷ்மீர் மக்கள் குறித்து அமரன் பட நடிகர் உமைர் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சிவகார்த்திகேயனின் அமரன் படம் குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து இருக்கிறது. மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

தீபாவளிக்கு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்து இருக்கிறது. பிரபலங்கள், ரசிகர்கள் மட்டும் இல்லாமல் அரசியல் தலைவர்களும் அமரன் படத்தை பாராட்டி வருகிறார்கள். மேலும், இந்த படத்தில் காஷ்மீர் ராணுவ வீரரின் கதாபாத்திரத்தில் காஷ்மீரை சேர்ந்த உமைர் என்பவர் நடித்திருந்தார். இவரை தமிழ்நாட்டில் தான் தேடி கண்டுபிடித்து இயக்குனர் நடிக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலம் உமைருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்திருக்கிறது.

- Advertisement -

நடிகர் உமைர் பேட்டி:

இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் நடிகர் உமைர், அமரன் படம் எனக்கு நிறைய பெருமையை தேடிக் கொடுத்திருக்கிறது. இந்த தருணத்தில் நான் கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். என்னுடைய கதாபாத்திரத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று நான் நினைத்து கூட பார்க்கவில்லை. காஷ்மீர் மக்களுமே என்னை ரொம்ப பாராட்டி இருந்தார்கள். எல்லோருமே எனக்கு துணையாக இருந்ததற்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது. படக்குழுவினர் காஷ்மீரில் வெளியே சுற்றும் போது நான் தான் அவர்களுக்கு கைட்டாக இருந்தேன்.

படம் குறித்து சொன்னது:

காரணம், நான் காஷ்மீரில் இருந்ததனால் எனக்கு சில விஷயங்கள் தெரியும். அதேபோல் நீங்கள் நினைப்பது போல் ராஸ்ட்ரியா ரைஃபிள்ஸ் மட்டும் கிடையாது. 33 ராஸ்ட்ரியா ரைஃபிள்ஸ், 26 ராஸ்ட்ரியா ரைஃபிள்ஸ் இருக்கிறார்கள். கிராமப்புறங்களில் சுற்றும் போது அவர்களை நான் பார்த்திருக்கிறேன். என்னுடைய 13 வயதில் தான் நான் மேஜர் முகுந்த் வரதராஜனை பற்றி கேள்விப்பட்டேன். எங்களுக்கு இந்த மாதிரியான ராணுவ வீரர் இறக்கும்போது ஊரடங்கு போடுவார்கள். அப்போது எங்களுக்கு ஸ்கூல் லீவ் கிடைக்கும் என்று சந்தோசமாக இருக்கும். அந்த வயதில் பெரிதாக எதுவும் தெரியாது. அதற்கு பிறகு எனக்கு 23 வயதில் தான் அமரன் படத்தில் நடிக்க கேட்டார்கள்.

-விளம்பரம்-

அமரன் பட வாய்ப்பு:

அப்போதுதான் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அவர்கள் மேஜர் முகுந்த் வரதராஜனை பற்றி என்னிடம் பேசினார். அதற்கு பிறகு தான் அவருடையவீரத்தை பற்றி நான் உணர்ந்தேன். இது முழுக்க முழுக்க கமர்சியல் படம். மேஜரை பற்றிய பயோபிக் படம். அதேபோல் காஷ்மீரில் கல் வீசுவது, போர் நடப்பதெல்லாம் இருந்தாலும் இன்னொரு பக்கமும் இருக்கிறது. வகீத் மாதிரியான நபர்கள் ராணுவத்தினர் கூட இருக்கிறார்கள். படத்தில் ஒரு காஷ்மீரியை ராணுவ வீரர் அவருடைய உயர் அதிகாரிகளை தாண்டி வந்து காப்பாற்றி இருப்பார். இப்படி சின்ன சின்ன விஷயங்களை கூட படத்தில் காண்பித்து இருக்கிறார்கள்.

காஷ்மீர் மக்கள் நிலைமை:

அதேபோல் ஒரு நான் ஒரு தீவிரவாதின்னு வைத்துக்கொள்ளலாம். நான் ஒருத்தருடைய வீட்டுக்குள் நுழைந்து அவர்களிடம் எனக்கு சாப்பாடு கொடுக்க வேண்டும், இல்லை என்றால் கொன்றுவிடுவேன் என்று மிரட்டும்போது அவர்கள் பயந்து சாப்பாடு கொடுப்பார்கள். அந்த நேரத்தில் ராணுவத்துக்கு இந்த தகவல் கிடைத்தவுடன் அந்த வீட்டுக்கு வருகிறார்கள். அப்ப ஏன் இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தீர்கள்? என்று அவர்களை கேள்வி கேட்பார்கள். அவர்களுக்கு வேறு வழி இல்லை. இதற்கு முன்னாடி எல்லாம் நம்முடைய வாழ்க்கை இப்படித்தான் என்று நினைத்திருந்தார்கள். ஆனால், கடந்த சில வருடங்களாக மக்கள் அதை புரிந்து கொண்டு மாறத் தொடங்கி இருக்கிறார்கள் என்று பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

Advertisement