பிக் பாஸ் வருவதாக இருந்த நடிகை.! ஆனால், நேற்றைய எபிசோடை பார்த்து எடுத்த திடீர் முடிவு.!

0
13921
Meera-cheran

பிக் பாஸ் நிகழ்ச்சியை ரசிகர்கள் மட்டுமல்ல சில சினிமா பிரபலங்களும் மிகவும் தீவிரமாக பின்தொடர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான கஸ்தூரி பிக் பாஸ் நிகழ்ச்சியை தீவிரமாக தொடர்ந்து வரும் ஒரு முக்கிய பிரபலமாக இருந்து வருகிறார்.

ஒவ்வொரு ஆண்டு பிக் பாஸ் துவங்கும் போதும் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொல்லப்போகிறார் என்று செய்திகளும் பரவியது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன் தொடங்கி தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீசன் வரை உள்ள போட்டியாளர்களை குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் காஸ்தூரி.

இதையும் பாருங்க : மகள்களுக்காக தான் வாழ்கிறேன் என்று அழுத சேரன்.! ஆனால், மகளால் அவர் பட்ட கஷ்டம்.! 

- Advertisement -

இந்த நிலையில் நேற்றய நிகழ்ச்சியை கண்ட பிறகு ட்விட்டர் பக்கத்தில் டீவீட்டியுள்ள கஸ்தூரி, மூணு வருஷமா கேட்குறாங்களே இந்த வருஷம் போகலாம்ன்னுட்டுதான் கொஞ்சம் பார்த்துட்டு வர்றேன். ஆனா நேத்து எபிசொட் பார்த்தப்புறம் “ஐயோ சாமி ஆளை வுடு ” என்ற பீலிங் தான் வருது. மாட்டிட்டு அவஸ்தைப்படுறவருக்கு பாவம் என்ன கட்டாயமோ? என்று பதிவிட்டுள்ளார்.

கஸ்தூரி இப்படி பதிவிடுவதற்கு முக்கிய காரணமே, பிக் பாஸ்சின் நேற்றைய எபிசோடில் சேரன் மீது மீரா வைத்த அசிங்கமான குற்றச்சாட்டால் சேரன் மிகவும் மனம் வருந்திய அந்த சம்பவம் தான். தமிழ் சினிமாவில் பல விருதுகளை குவித்த சேரனுக்கே இந்த கதி என்றால் நமக்கு என்ன நேர்ந்திடுமோ என்று வியந்துபோய்யுள்ளார் கஸ்தூரி.

-விளம்பரம்-
Advertisement