சமீபகாலமாக சோசியல் மீடியாவின் பயன்பாடு அதிகமாக இருக்கிறது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என பலருமே சோசியல் மீடியா மூலம் பிரபலமாகி இருக்கிறார்கள். சமூக வலைத்தளத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி சினிமாவிலும் வாய்ப்பு தேடிக் கொள்கிறார்கள். அந்த வகையில் சோசியல் மீடியா மூலம் பிரபலமானவர் காத்து கருப்பு கலை. முதலில் இவர் சின்ன சின்ன வீடியோக்களை தான் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்.
டிக் டாக், இன்ஸ்டாகிராம் போன்ற செயலியின் மூலம் இவர் பதிவிடும் வீடியோக்கள் எல்லாம் நல்ல வரவேற்பு பற்றி இருந்தது. ஒரு கட்டத்தில் இவர் ஆபாசமாகவும் டபுள் மீனிங் பேசி வீடியோக்களை பதிவிட்டிருந்தார். இவருக்கு திருச்சி சாதனா தான் உறுதுணையாக இருந்தார். இருவரும் சேர்ந்து கொண்டு இரட்டை அர்த்தத்தில் பேசி நடனமாடும் வீடியோக்களை எல்லாம் பதிவிட்டிருந்தார்கள். இது குறித்து பல விமர்சனங்கள் வந்தாலும் இதன் மூலம் காத்து கருப்பு கலை பிரபலம் ஆகிவிட்டார்.
காத்து கருப்பு கலை வீடியோ:
அதற்கு பிறகு இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவரை பல சேனல்கள் பேட்டி எடுத்து இருந்தது. பின் இவர் நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருக்கிறார். மற்ற youtube சேனல்கள் நடத்தி வரும் நிகழ்ச்சிகளையும் இவர் தொகுத்தும் பிரபலங்களை வைத்து பேட்டி எடுத்தும் வருகிறார். அதேபோல் தான் கேஜிஎப் விக்கியும் சோசியல் மீடியா மூலம் பிரபலமானவர். இவர் அஜித்தின் துணிவு படத்திலும் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
கே ஜி எஃப் விக்கி
அதுமட்டுமில்லாமல் இவர் துணி கடை ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில்
கே ஜி எஃப் விக்கியை காத்து கருப்பு கலை பேட்டி எடுத்திருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கேஜிஎப் விக்கி, எதற்கு இந்த youtube சேனல் நடத்தி வருகிறார். இதனால் ஒரு நல்லதுமே கிடையாது. நீ என்னுடன் வந்து விடு உனக்கு தனியாக ஒரு கடை வைத்து தருகிறேன்.
End 🤣🤣🤣🤣🤣🤣 pic.twitter.com/ZWwMdoxP3E
— James Stanly (@JamesStanly) February 4, 2024
காத்து கருப்பு கலை பதில்:
கால்கஞ்சி குடித்தாலும் நிம்மதியாக உழைத்து சாப்பிடலாம். எதற்கு இந்த வீடியோக்கள்? இந்த சேனல் எல்லாம் ஒரு கட்டத்தில் நம்மை தூக்கி போட்டு விடும். இதை நம்பி பலபேருடைய வாழ்க்கை சீர் அழிந்து இருக்கிறது. இதை விட்டு வந்து விடு. உனக்காக ஒரு வேலையை ஏற்படுத்தித் தருகிறேன் என்றெல்லாம் பேசி இருக்கிறார். உடனே காத்து கருப்பு கலை, இதெல்லாம் போடாதீர்கள். கட் பண்ணுங்கள். நீ இந்த இடத்தை விட்டு கிளம்பு என்று மூஞ்சியில் அடித்த மாதிரி பேசி இருக்கிறார்.
நெட்டிசன்கள் விமர்சனம்:
தற்போது இந்த வீடியோ தான் வெளியாகி இருக்கிறது. இதை பார்த்த பலருமே இது இவர்கள் பிரபலமாகுவதற்கான ட்ரெண்டிங் யுக்தி. அதனால் இந்த வீடியோ செய்திருக்கிறார்கள். இவர்கள் ரெண்டு பேருமே மட்டமான நபர்கள். பிரபலத்திற்காக தான் இப்படி எல்லாம் இவர்கள் பேசி இருக்கிறார்கள் என்றெல்லாம் வறுத்து எடுத்து வருகிறார்கள்.