விஜய்யால் பல நல்ல படங்களை இழந்தேன். 19 ஆண்டுகள் அங்கிகாரம் கிடைக்காதது குறித்து விக்ராந்த்.

0
263
- Advertisement -

விஜய்யால் பல நல்ல படங்களை இழந்து இருக்கிறேன் என்று விக்ராந்த் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவராக விக்ராந்த் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் 2005ஆம் ஆண்டு வெளிவந்த கற்க கசடற என்ற திரைப்படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் நினைத்து நினைத்து பார்த்தேன், நெஞ்சத்தைக் கிள்ளாதே, கோரிப்பாளையம், பாண்டியநாடு, தாக்க தாக்க, பக்ரீத் போன்ற பல படங்களில் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

இருந்தாலும் விக்ராந்த் அவர்கள் தன் அண்ணனை போல் சினிமாவில் கொடி கட்டி பறக்க முடியவில்லை. விக்ராந்த் அண்ணன் வேற யாரும் இல்லைங்க, நம்ம தளபதி விஜய் தான். விஜய்யின் அம்மா சோபாவும், விக்ராந்த் அம்மா ஷீலாவும் அக்கா தங்கைகள். விக்ராந்த் அவர்களின் பெரியம்மா மகன் தான் விஜய் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகர் விக்ராந்தின் அம்மா ஷீலாஅவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சீரியலில் நடித்து வருகிறார்.

- Advertisement -

விக்ராந்த் திரைப்பயணம்:

பின் சினிமாவில் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றவுடன் இவர் இவர் சில வருடங்களுக்கு முன் ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து இருந்தார். நடிகர் அர்ஜுன் தொகுப்பாளராக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். இந்த நிகழ்ச்சி மூலம் விக்ராந்த் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதற்கு பிறகு இவர் படங்கள் பெரிதாக வெளியாகவில்லை. இப்படி கிட்டத்தட்ட 19 ஆண்டுகளாக இவர் சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

லால் சலாம் படம்:

இருந்தாலும், இவருக்கு தமிழ் சினிமாவில் சரியான அங்கீகாரமும் கிடைக்கவில்லை. தற்போது இவருடைய நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் லால் சலாம். இந்த படத்தை ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஷ்ணு விஷாலும் நடித்திருக்கிறார். மேலும், ரஜினிகாந்த் அவர்கள் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தான் முடிவடைந்தது.

விக்ராந்த் பேட்டி:

இன்னும் சில தினங்களில் இந்த படம் வெளியாகி இருக்கிறது. இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தின் ரிலீஸ் ஆக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் விக்ராந்த் அவர்கள் தன்னுடைய திரை பயணம் குறித்தும் விஜய் குறித்தும் கூறி இருந்தார். அதில் அவர், கடந்த ஐந்து, ஆறு வருடங்களாக என்னிடம் கதை சொல்ல வருபவர்கள் விஜய் அண்ணாவை பற்றி கேட்காமல் இருக்கிறார்கள். நான் விஜய் என்கிற பெரிய நடிகரோட தம்பி என்பதினால் எல்லோருடைய கவனம் அவர் மீது தான் இருக்கிறது.

விஜய் குறித்து சொன்னது:

முன்பெல்லாம் என்னிடம் கதை சொல்ல வருபவர்கள் விஜய் சார் ஒரு ரோலில் நடிக்க சொல்லுங்க, அவரை ஒரு ட்விட் போட சொல்லுங்க, விஜய் ஒரு பாட்டில் வந்து தலையை காட்டிட்டு போக சொல்லுங்க, படத்தோட இசை வெளியீட்டு விழாவிற்கு விஜய் கூட்டிட்டு வாங்க என்று தான் கேட்பார்கள். அவர்கள் கேட்டதற்கு நான் மறுப்பு தெரிவித்தேன். இதனால் நான் நிறைய படங்களை மிஸ் செய்து இருக்கிறேன். அதில் நல்ல படங்களும் இருக்கிறது. தனிப்பட்ட முறையில் விஜய் அண்ணா எனக்கு நிறைய உதவி பண்ணி இருக்கிறார். ஆனால், சினிமா சம்பந்தமாக நான் அவரிடம் எந்த உதவியும் கேட்க மாட்டேன் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

Advertisement