திருமண வாழ்க்கை, 200000 செலவில் மாடுகளுக்கு கூடாரம் – பிறந்தநாளில் கவிஞர் தாமரையின் நெகிழ்ச்சியான பதிவு.

0
519
thamarai
- Advertisement -

மறுவார்த்தை பேசாதே, கஜினி படத்தின் ஒருமாலை, வசீகரா போன்ற மக்கள் மனதில் என்றும் அழியாத பல பாடங்களை எழுதியவர்தான் பெண் திரைப்பட பாடலாசிரியர் தாமரை. இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி பிறந்தநாளை கொண்டாடிய இவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்த பதிவு ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் பிறந்த தாமரையின் தந்தை கவிஞர் மற்றும் நாடகாசிரியர் ஆவார். தன்னுடைய தொடக்க காலத்தில் இயந்திர பொறியியல் படிப்பை படித்து வேலைசெய்து வந்த தாமரை கவிதையின் மீதி கொண்ட காதலினால் சென்னைக்கு குடிபெயர்ந்து அங்கு பல கட்டுரைகளையும், கவிதைகளையும், கதைகளையும் எழுதினார்.

-விளம்பரம்-

அதன் பிறகு இவரின் பாடலால் தனித்தன்மை வாய்ந்ததாக இருந்ததால் திரையில் பாடல்களை பாட வாய்ப்பு கிடைத்துள்ளது. 1998ல் வெளியான தென்றல் எந்தன் நடையை கேட்டது என்ற பாடலின் மூலம் அறிமுகமான இவர் தற்போது பல முன்னை நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்களில் பாடல்களை எழுதியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டில் பாடகர் சித் ஸ்ரீராம் பாடிய மறுவார்த்தை பேசாதே பாடல் ஷோசியல் மீடியாவில் வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனனுடைய பிறந்தநாளை கொண்டாடிய பெண் பாடலாசிரியர் தாமரை தன்னுடைய முகநூல் பக்கத்தில் போட்டிருந்த பதிவில்

- Advertisement -

என் பிறந்தநாளுக்காக சுற்றமும் நட்பும் இரசிகக் கண்மணிகளும் வாழ்த்துமழை பொழிந்து தள்ளிவிட்டார்கள். மழைக்காக விடுமுறைக்கு மேல் விடுமுறை அது எனக்கல்ல, சமரனுக்கு . இதனால் தொலைபேசி அழைப்பு, குறுஞ்செய்திகள், சமூகவூடகங்கள், தொலைக்காட்சி என வாழ்த்துவதற்கான அத்தனை வாய்ப்பிலும் வாழ்த்தித் தள்ளி விட்டார்கள். ஒரு திரைப்படப் பிரபலம் வாழ்த்துமழை வியப்பில்லை என்றாலும் அதிகம் முகம்காட்டாத, பாடல்கள் வாயிலாகவே அறியப்பட்ட எனக்கும் இவ்வளவு அன்பா! யோசித்துப் பார்த்தால், திரைப்பெருவலம் என்பதைத் தாண்டி, முகமே தெரியாவிட்டாலும் என்

பாடல்களினால் ஓர் ஆழ்ந்த அண்மையை உணர்ந்து வாழ்த்தியவர்களே ஏராளம் 25 ஆண்டுகளுக்கு முன்பு, துறையை சட்டென்று மாற்றி திரைப்பாடலைத் தேர்ந்தெடுத்த போது திகிலாகத்தான் இருந்தது. இப்போது திரும்பிப் பார்த்தால், சரியான முடிவைத்தான் எடுத்திருக்கிறேனென்று புரிகிறது துறையில் நான் சந்தித்த கூர்நெருக்கடிகளின்போது விட்டுவிட்டுப் போய்விடலாமா என்கிற சிந்தனை வந்ததுண்டு. அப்போதெல்லாம் என்னையே தேற்றிக் கொள்ள, ‘நானும் விலகி விட்டால் அப்புறம் யார்தான் இந்தவகைப் பாடல்களை எழுதுவதாம் ? எத்தனைபேர் காத்திருக்கிறார்கள் !!!’ என்று சமாதானம் சொல்லி இருத்திக் கொள்வேன் இன்றைக்கு, உள்ளபடிக்கே என் பாடல்களுக்காக எத்தனையோ பேர் ஆவலோடு காத்திருக்கிறார்கள் என்று உணரும் போது ‘ஒருபோதும் இவர்களை ஏமாற்றலாகாது’ என்கிற எண்ணம் மேலோங்குகிறது.

-விளம்பரம்-

பிறந்ததிலிருந்து ஐம்பதாண்டுகள் வரை வாழ்வை நோக்கிய பயணம் விளையாட்டு படிப்பு திட்டங்கள் திருமணம் குழந்தை குடும்பம் வீடு வாகனம் என அனைத்தும் மேல்நோக்கிய பயணமே ! ஐம்பதைத் தாண்டிய பிறகு அது மரணத்தை நோக்கிய பயணமாக மாறுகிறது. எல்லாம் ஆடி முடித்து அனுபவக் கொள்முதல் செய்தபிறகு ஒவ்வொரு நாளும் அருளப்பட்ட நாளே எனத் தோன்றி விடும். இனி எத்தனை நாள் இருக்கப் போகிறோமோ, அதற்குள் இன்னின்னது செய்து விட வேண்டும் என்று தோன்ற ஆரம்பிக்கும். எனக்குச் சில ஆண்டுகளாகவே இந்தச் சிந்தனை வந்து விட்டது. ஏதேனும் உருப்படியாகச் செய்து விட்டுப் போக வேண்டும். 30 ஆண்டுகள் திரும்பிப் பாராத ஓட்டத்தில் நான் முதன்மையாக இழந்தது புத்தக வாசிப்பைத்தான் ! விட்டதைப் பிடிக்க வேண்டும், ஏராளமாகப் படிக்க வேண்டும், படித்ததைப் பயனுறும் வகையில் எல்லோருக்கும் பகிர வேண்டும் என்கிற ஆவல் ததும்புகிறது என்று குறிப்பிட்டிருந்தார் தாமரை.

இப்படி கூறியிருக்கும் பாடலாசிரியர் தாமரை விலங்குகளை பாதுகாக்க வேண்டும். அவற்றினை நம்மால் முடிந்த அளவிற்கு பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கூறிய தாமரை தன்னுடைய பிறந்தநாளின் போது சாய் விக்னேஷ் விலங்குகள் காப்பகம் சென்று வந்ததேன் அங்கு இரண்டு ஆண்டுகளாக மலையிலும் வெய்யுளிலும் வாடிய மாடுகளுக்கு என்னுடைய அப்பாவின் பெயரில் கடந்த ஆண்டு ரூ 2,00,000/- செலவில் கூடம் ஓன்று அமைத்து கொடுத்தேன் இதனால் மாடுகள் தற்போது மழையிலும் , சூரியனின் வெப்பமும் தக்காமல் இருப்பதை கண்டு மனமகிழ்ச்சி அடைகிறேன் என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார் பாடலாசிரியர் தாமரை.

Advertisement