‘நீ எல்லாம் ஒரு பொண்ணா” – கண்ணீருடன் கடைசியாக ஆடியோ வெளியிட்டு கணவர் தற்கொலை. யார் இந்த விஜி ?

0
290
thamarai
- Advertisement -

கோவையை சேர்ந்த தற்கொலை செய்து கொண்டவர் இறப்பதற்கு முன்னர் பேசிய ஆடியோ பதிவு பலரையும் கதிகலங்க வைத்துள்ளது. கோவை மாவட்டம் தென்னம்பாளையத்தை சேர்ந்தவர் சிவா என்ற ரத்தினசீலன்தான், இவருக்கும் சென்னையை சேர்ந்த விஜி என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்ப்பட்டுள்ளது. இந்த நிலையில் இருவரும் திருமணம் செய்தது கொண்டிருக்கிறார்கள். விஜியின் மூன்றாவது திருமணம் இவருக்கு ஏற்கனவே மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட பிரச்சனைகளினால் சிவா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

-விளம்பரம்-

தோழியாக அறிமுகமான விஜி :

இந்தநிலையில் அவரது பெற்றோர்கள் தன்னுடைய மகனின் இறப்பிற்கு நீதி கேட்டு காவல் துறையில் புகார் அளித்துள்ளார். மேலும் சமீபத்தில் பிரபல செய்தி ஊடகம் இது தொடர்பாக சிவாவுடைய பெற்றோர்களிடம் பேட்டி எடுத்திருந்தது. அதில் அவரின் தாய் ஈஸ்வரி கூறியதாவது “என்னுடைய மகனின் தோழியாக அறிமுகமாகியவர் தான் விஜி. இவர் கடந்த மார்ச் மாதம் தன்னுடைய வயிற்றில் அறுவை சிகிட்சை செய்திருப்பதினால் ஒரு வாரம் மட்டும் வீட்டில் ஓய்வு எடுக்க வரலாமா அம்மா. என்று கேட்டிருந்தார் பின்னர் ஒரு வாரத்திற்கு பதிலாக இரண்டு மாதங்கள் வீட்டிலேயே இருந்தார்.

- Advertisement -

விஜியின் திருமணம் :

அப்போது விஜியை பார்க்க கல்லுரியில் படிக்கும் மாணவிகளை போன்ற இரு பெண்களை அழைத்து வந்தார் அப்போதுதான் தெரிகிறது அது அவரின் மகள்கள் என்று. பின்னர் சிவா விஜியை திருமணம் செய்து கொள்வதாக எங்களிடம் கூறினான். ஆனால் அதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.இந்த நிலையில்தான் விஜியின் செல்போனில் அவர் மற்றவர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும். ஆபாசமான அந்தரங்க பதிவுகளையும் கண்ட சிவா விஜியை வீட்டை விட்டு வெளியில் அனுப்பினான்.

2 லட்சம் கேட்டு மிரட்டிய விஜி :

இதற்கு பிறகு விஜி சிவாவுடைய அலுவலகத்திற்கு சென்று “இனி நான் தவறு செய்ய மாட்டேன். என்னுடைய குழந்தை உட்பட எல்லோரையும் விட்டு வந்து விடுகிறேன் என்று காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுள்ளார். இதனால் மனமிரங்கிய என்னுடைய பையனும் கடந்த 5ஆம் தேதி விஜியை வீட்டுக்கு அழைத்து வந்து மருதமலை கோவிலில் இருவர் மட்டும் தனியே திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் திருமணமாகி சில நாட்களிலிலேயே மீண்டும் இருவருக்கும் பிரச்சனை நடந்தது. தனக்கு 2 லட்சம் கடன் வாங்கி தருமாறு கேட்ட விஜி பின்னர் ஏன் உங்களுடைய வீட்டில் தாலிக்கொடி போடவில்லை என்று சண்டை போட்டுள்ளார்.

-விளம்பரம்-

சிவா பதிவிட்ட 43 ஆடியோக்கள் :

இந்த சடையினால் இருவரும் பிரித்துள்ளார், அதற்கு பிறகு விஜி தன்னுடைய அக்கா மற்றும் தோழிகளின் மூலம் சிவாவை கேவலமாக பேசியுள்ளார். இதனால் மனா உளைச்சலுக்கும் சொல்ல முடியாத அவமானங்களுக்கு ஆளான சிவா கடந்த செப்டம்பர் மாதம் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று சிவாவின் பெற்றோர்கள் கூறியிருந்தனர். தற்கொலை செய்வதற்கு முன்னர் சிவா 43 ஆடியோ பதிவுகளை செய்துள்ளார். எனவே அதனை அடிப்படையாக கொண்டு தங்களுடைய மக்களின் தற்கொலைக்கு காரணமாக இருந்த விஜியின் குடும்பத்தினர் மற்றும் அவருக்கு ஆதரவாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.

விஜி கூறியது :

இந்த நிலையில் விஜி பழனிசாமியுடன் இவர் மீது கோரப்படும் குற்றசாட்டுகளை குறித்து கேட்ட போது சிவாவிற்கு திருமணம் செய்ய அவரது வீட்டில் வர்ண் பார்த்துக்கொண்டிருந்தனர். எனவே சிவா என்னிடம் பேசினார். எனக்கு திருமணமாக்கு குழந்தைகள் இருப்பதை கூறிய பிறகுதான் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார் சிவா. அவருடைய அம்மாதான் என்னிடம் முதலில் சண்டை போட்டார் மேலும் சிவாதான் தவறாக மெசேஜ் அனுப்புனார் என்று கூறிய விஜி. என்னுடைய குடும்பத்தை தவறாக பேசியத்தினால்தான் நான் அவரிடம் இருந்து வந்துவிட்டேன்.

மேலும் கவிஞர் தாமரை கூறியதை சுட்டிக்காட்டி விஜி, தாமரை காழ்ப்புணர்ச்சியை பேசுகிறார். நான் யாரிடமும் பணம் வாங்கவும் இல்லை, அரசியல் வாதிகளை வைத்து யாரையும் மிரட்டவும் இல்லை. எனக்கு ஒரு துணை வேண்டுமென்றுதான் திருமணம் செய்தேன் ஒருவிதத்தில் அவரின் இழப்பு என்னை பதித்திருக்கிறது. ஆனால் அவரின தற்கொலைக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்? என்று கூறினார் விஜி.

சிவாவின் கடைசி ஆடியோ :

இந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட சிவா தன்னுடைய கடைசி ஓடியோ பதிவில் ” நான் உன்னை போல இல்லை விஜி.யாருடைய வாழ்க்கையையும் கெடுக்க நான் விரும்பவில்லை. என்னுடைய சாவுக்கு நான் தான் காரணம் என்று கூறியிருந்தது கேட்பவர் மனதை கதிகலங்க வைக்கிறது

Advertisement