நெற்றிக்கண் ரீ-மேக் உரிமையை தனுஷ் வாங்கினாரா இல்லையா. கவிதாலயா வெளியிட்ட அறிக்கை இதோ.

0
3547
dhanush
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகரும், இயக்குனரும் ஆனவர் விசு. விசு அவர்கள் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா, தொகுப்பாளர் என பல முகங்கள் கொண்டவர். இவர் முழு பெயர் எம் ஆர் விஸ்வநாதன். இவர் முதன் முதலில் இயக்குனர் பாலச்சந்திரனிடம் தான் துணை இயக்குனராக பணிபுரிந்தார். அப்போதே இவர் திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பின் ரஜினியின் தில்லு முல்லு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

-விளம்பரம்-
Image result for Netrikkan

ரஜினிகாந்த் நடிப்பில் 1981ஆம் ஆண்டு திரைக்கு வந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் நெற்றிக்கண். இந்த படத்தில் லட்சுமி, சரிதா, மேனகா, விஜயசாந்தி, கவுண்டமணி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தை எஸ்பி முத்துராமன் இயக்கியிருந்தார். பாலச்சந்திரன் கவிதாலயா பட நிறுவனம் தயாரித்திருந்தது. விசு இந்த படத்திற்கு கதை எழுதி இருந்தார். தற்போது நடிகர் தனுஷ் அவர்கள் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்ய இருப்பதாகவும், ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பதாகவும் கூறி உள்ளார். ஆனால், நெற்றிக்கண் படத்தின் ரீமேக்கிற்கு தனக்கு அதற்கான இழப்பீடு எதுவும் குடுக்கவில்லை என்றும் கூறி இருந்தார்.

- Advertisement -

இதையும் பாருங்க : சுக்கிரன் உச்சத்தில் இருக்கும் பிக் பாஸ் 3 நடிகை. அடுத்து ஆர்யாவின் படத்தில்.

மேலும், இந்த படத்தை ரீ மேக் செய்ய வேண்டும் என்றால் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயாவிடம் இருந்து உரிமம் வாங்கினால் மட்டும் போதாது. இந்த படத்தின் கதாசிரியரான என்னிடம் வந்து கேட்பது சரியாக இருக்கும். என்னிடம் உரிமை பெறாமல் நெற்றிக்கண் படத்தை தனுஷ் ரீமேக் செய்தால் தனுஷ் மீது கோர்ட்டில் நான் வழக்கு தொடருவேன் என்று கோபமாக கூறி இருந்தார். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து கவிதாலயா நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

-விளம்பரம்-

அதில், நெற்றிக்கண் திரைப்படத்தின் முழு காப்புரிமையும் அப்படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் கவிதாலயா வசமே இருக்கிறது அதன் தமிழ் ரீமேக் உரிமையை கேட்டு யாரும் இதுவரை எங்களை அணுகவில்லை. நாங்கள் யாருக்கும் கொடுக்கவும் இல்லை .இந்த நிலையில் திரு விசு கதை ஆசிரியர் என்ற முறையில் தனக்கு உரிய ஊதியத்தை தரவில்லை என்று கூறுவது அடிப்படை ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டு அவ்வாறு ரீமேக் உரிமை விற்கப்படும் ஏய் ஆனால் சம்பந்தப்பட்டவர்களின் உரிமைகளை மனதில் கொண்டே கவிதாலயா செயல்படும்.

மேலும் திரு விசு அவர்கள் தில்லுமுல்லு திரைப்படம் தொடர்பாக முன் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவிதமான ஒரு அடிப்படை ஆதாரமும் முகாந்திரமும் கிடையாது. இது சம்பந்தமாக அவர் தொடர்ந்து வழக்கில் கவிதாலயா அதன் நிர்வாகிகளும் சம்பந்தப்படவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். ஆக கவிதாலயா ஆகும் மற்றும் அதன் நிர்வாகிகளும் ஒப்பந்த மீறல்களுக்கும் விதிமீறல்களுக்கும் ஒருபோதும் துணை நின்றது இல்லை என்பதை இதன் மூலம் வலியுறுத்தி கூறுவதோடு அனைத்து தரப்பினருக்கும் இதன் மூலமாக தெளிவு படுத்துகிறோம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நெற்றிக்கண் திரைப்படத்தின் ரீமேக் உரிமையை தனுஷ் இன்னும் வாங்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது

Advertisement