Trpக்கு ரிஸ்க் எடுக்கும் சீரியல்கள் – உயிரை பணயம் வைத்து நடித்த கயல் சைத்ரா. Trpக்கு கை கொடுத்ததா ?

0
1886
Kayal
- Advertisement -

சின்னத்திரை சீரியல்களின் இந்த வாரத்திற்கான டிஆர்பி பட்டியல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. பொதுவாக தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கியதிலிருந்தே பொழுதுபோக்கு அம்சமாக சீரியல்கள் விளங்குகிறது. சமீப காலமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சின்னத்திரை பக்கம் சென்று விட்டார்கள். குறிப்பாக, தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-
kayal

இதனால் வெள்ளித்திரையை விட, சின்னத்திரையை ரசிக்கும் ரசிகர்களின் பட்டாளம் அதிகமாகி இருக்கிறது. மேலும், ஒவ்வொரு சேனலும் புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் முதல் இரவு தூங்கும் வரை சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது. தற்போது சீரியல்களின் வரவேற்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருப்பதால் ஞாயிற்று கிழமைகளிலும் சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது.

- Advertisement -

சன் டிவி தொடர்கள் :

தமிழகத்தில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சேனல்களாக சன் டிவி திகழ்கிறது. அதேபோல் டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி சீரியல் தான் முன்னிலை வகுத்து வருகிறது. தற்போது கயல்,எதிர்நீச்சல், வானத்தைப்போல, இனியா, மிஸ்டர் மனைவி ஆகிய தொடர்களுக்கு மத்தியில் தான் கடுமையான போட்டி நிலவி கொண்டிருக்கின்றது. அந்த வகையில் டிஆர்பி யில் கடந்த சில மாதங்களாகவே கயல் சீரியல் தான் முன்னிலையில் இடம் பெற்றிருந்தது. ஆனால், கடந்த கடந்த சில வாரங்களாக எதிர்நீச்சல் சீரியல் கயல் சீரியலை பின்னுக்கு தள்ளி டிஆர்பியில் முதல் இடத்தை பிடித்தது. இந்த நிலையில் இந்த வார டிஆர்பி டேட்டிங் பட்டியல் வெளியாகியிருக்கிறது.

கயல்:

எதிர்நீச்சல் சீரியலை மீண்டும் பின்னுக்கு தள்ளி கயல் சீரியல் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியலில் கயல் என்ற கதாபாத்திரத்தில் சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். இது கயல் குடும்பத்திற்காக ஆசை, சந்தோசம் எல்லாத்தையும் இழந்து போராடும் ஒரு பெண்ணின் கதை. இந்த தொடர் 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 25ஆம் தேதி முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வாரம் எழில், கயலின் திருமண ட்ராக் தான் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. இந்த வாரம் கயல் தொடருக்கு 12.48 புள்ளிகள் கிடைத்து முதல் இடத்தை பிடித்துள்ளது.

-விளம்பரம்-

அது மட்டும் இல்லாமல் டிஆர்பி ரேட்டிங்காக கயல் சீரியல் செய்து இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, சீரியலில் கயல் ஐஸ் கட்டியின் மேல் உண்மையாகவே நிற்க வைத்து இருக்கிறார்கள். கயல் சீரியல் டிஆர்பி ரேட்டிங் காக பயங்கரமாக உழைத்துக் கொண்டிருப்பதால் தான் முன்னிலையில் இருக்கிறது என்று சொல்லலாம். அதற்கு போட்டியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா, தண்ணீர் தொட்டியில் முங்கி எதிரிக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்து ‘நீங்கள் நினைப்பது போல ஷூட்டிங் எல்லாம் அவ்வளவு சுலபம் இல்லை’ என்று பதிவிட்டுள்ளார்.

எதிர்நீச்சல் சீரியல்:

இப்படி பல சீரியல்கள் Trpகாக போட்டிபோட்டு கொண்டு இருக்கும் நிலையில் டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்நீச்சல் சீரியல் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது. தற்போது சொத்து ட்ராக் தான் பரபரப்பாக செல்கிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்கள் உரிமையை மையமாக கொண்ட கதை. இந்த வாரம் எதிர்நீச்சல் தொடருக்கு 11.55 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

ரசிகர்களின் வரவேற்பு:

இந்த நிலையில், இரு சீரியல்களுக்கு இடையில் மாறி மாறி போட்டிகள் நிலவி இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த இரு தொடர்களையும் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வாரமும் அதிகரித்துக் கொண்டு செல்வதாகவும் கூறப்படுகிறது. தற்போது சோசியல் மீடியாவில் கயல், எதிர்நீச்சல் சீரியல் டிஆர்பி தகவல் தான் ட்ரெண்டிங் ஆகி வருகிறது

Advertisement