`மீண்டும் கட்சிக்குள் அழகிரி என்ட்ரி ஆகிறாரா’ – தந்தையை உதயநிதி சந்தித்த காரணம் சொன்ன அழகிரியின் மகள்

0
659
udhay
- Advertisement -

சமீபத்தில் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட அவரது பெரியப்பாவான மு.க.அழகிரியை சந்தித்தது தற்போது அரசியல் வட்டாரங்களில் புருவத்தை உயர்த்த வைத்திருக்கிறது. இந்த செயலாய் மீண்டும் மு.க.அழகிரி கட்சியில் நுழைகிறாரா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது. இந்த நிலையில் தான் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி அழகிரி சமீபத்தில் பிரபல செய்தி ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருந்தார்.

-விளம்பரம்-

கயல்விழி :

அந்த பேட்டியில் அவர் கூறுகையில் அப்பாவிற்கு எப்போதுமே தம்பி உதயநிதி மீது ஒரு அன்பு இருக்கிறது. அப்போதெல்லாம் மதுரையில் சாலைகள் சரியாக இருக்காது எனவே தம்பி உதயநிதி மதுரை வரும்போது அவரை மடியில் தூக்கி வைத்துக்கொள்வார். உதயாவும் பெரியப்பா என்று உயிராக இருப்பார். அந்த பாசத்தினால்தான் தற்போது அப்பாவை சந்தித்து வாழ்த்தும் பெற்றுள்ளார் என்று நெகிழ்ந்து பேசினார்.

- Advertisement -

பொங்கல் பண்டிகை :

எங்களுக்கு பொங்கல் தான் பெரிய பண்டிகை. அந்த பண்டிகையில் அப்பாவை உதயநிதி பார்த்து ஆசிர்வாதம் வாங்கியது மகிச்சியாக இருக்கிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அதை போலத்தான் நல்ல விஷியம் நடந்திருக்கிறது. மேலும் அவர் கூறுகையில் உதயாவுக்கு அப்பாவின் மேல் எப்போதுமே அன்பு இருக்கிறது. பள்ளிக்கூட விடுமுறையின் போது உதயநிதியும் செந்தாமரையும் எங்களுடன் தான் இருப்பார்கள். பாட்டி வழியில் உதயநிதிதான் முதல் ஆண் குழந்தை அதனால் குடும்பத்தில் எல்லோருக்கும் அவர் மீது தனிப்பாசம் என்றார்.

கலைஞரின் நிழலில் வளர்ந்தவர்:

நடிகராக இருந்து அமைச்சராக மாறியா உதயநிதி குறித்து எதிர்க்கட்சிகள் விமர்சிப்பதை பற்றி கேட்டபோது. உதயா அமைச்சராவதற்கு எல்லா தகுதியும் இருக்கிறது. கலைஞரின் பேரன், கலைஞர் என்ற ஆலமரத்தின் நிழலில் வளர்ந்த பிள்ளை என்பதை விட எந்த தகுதி வேண்டும்?. கலைஞரின் அரசியலை கூடவே இருந்து பார்த்திருக்கிறார். பள்ளியின் தலைமை ஆசிரியர் படிப்பு சொல்லிக் கொடுப்பதை விட அவரின் செயல்பாடுகளை பார்த்தே கற்றுக்கொள்ளலாம், அப்படிதான் தாத்தாவின் அரசியலை பார்த்துள்ளார் உதய என்று கூறினார் கயல்விழி.

-விளம்பரம்-

மீண்டும் இணைகிறாரா கயல்விழி :

மேலும் அப்படி தகுதியில்லாமலா மக்கள் அவரை எம்.எல்.ஏ ஆக்கியுள்ளனர்?. தமிழகத்திற்கு கண்டிப்பாக அவர் ஒரு திறமையான அமைச்சராக இருப்பர் என்று தெரிவித்தார் கயல்விழி. மேலும் மு.க. அழகிரி எப்போது கட்சியில் இணைவார் என்ற கேள்விக்கு பதிலளித்த கயல்விழி `உதயநிதியின் இந்த சந்திப்பு பொங்கல் வாழ்த்துக்களை பெரியப்பாவிற்கு சொல்வதற்காகத்தான் வந்தார் உதயநிதி.

இதில் எந்த விதமான அரசியல் நோக்கங்களும் இல்லை என்று கூறினார். மேலும் மு.க.எ,அழகிரியை திமுகாவில் சேர்ப்பதும் சேர்க்காமல் இருப்பதும் தன்னுடைய சித்தப்பாவான மு.க.ஸ்டாலினின் விருப்பம் என்றும் நல்ல முடிவாக எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம் என இந்த தகவல்களுடன் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவித்தார் கயல்விழி.

Advertisement