தன்னுடன் நடித்த இந்த நடிகரை தான் சுனைனா திருமணம் செய்துகொள்ள போகிறாரா?

0
4345
sunaina
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகை சுனைனா. தமிழில் நடிகர் நகுல் நடிப்பில் கடந்த 2008ம் ஆண்டு வெளியான காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை சுனைனா. இதனை தொடர்ந்து இவர் மாசிலாமணி, வம்சம், சமர், யாதுமாகி, தெறி, காளி, என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற பல்வேறு படங்களில் நடித்து உள்ளார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் ,கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்து உள்ளார். ஆனால், இவரால் முன்னணி நடிகையாக தான் வலம் வர முடியவில்லை.

-விளம்பரம்-
Sunaina, an underused misused actress who deserves more attention

- Advertisement -

சமீபத்தில் இயக்குநர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளிவந்த “சில்லுக் கருப்பட்டி” என்ற படத்தில் நடிகை சுனைனா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அவருடைய கதாபாத்திரத்தை பார்த்து பலரும் பாராட்டி உள்ளார்கள். தற்போது ட்ரிப், எரியும் கண்ணாடி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த ட்ரிப் படத்தின் டிரெய்லர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதையும் பாருங்க : புகைப்படத்தில் இருக்கும் இந்த பிரபல நடிகர் யாருனு தெரியுதா? பாத்தா நம்ப மாடீங்க.

இந்த ட்ரிப் படத்தை ஜூலை மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் நடிகை சுனைனாவும், நடிகர் கிருஷ்ணாவும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அறிமுக இயக்குனர் ஜெய் கிருஷ்ணா இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளிவந்த படம் தான்.

-விளம்பரம்-
Kazhugu' actor Krishna and actress Sunaina to have a love marriage ...

இந்த வன்மம் படத்தில் சுனைனா,கிருஷ்ணா இருவரும் இணைந்து நடித்து உள்ளனர். இவர்களுடன் இந்த படத்தில் விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது கிருஷ்ணாவும், சுனைனாவும் காதலிப்பதாக கூறப்படுகிறது. நடிகர் கிருஷ்ணா அவர்கள் 2014 ஆம் ஆண்டு ஹேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதையும் பாருங்க : கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ரக்ஷ்னுக்கு ஜோடியாக நடித்தவர் இந்த பிரபல இயக்குனரின் மகளா.

பின் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டுன் இருந்தார்கள். ஒரு கட்டத்தில் இந்த பிரச்சனை காவல் துறை வரை சென்றது. பின் ஹேமலதா மற்றும் கிருஷ்ணா இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர். இதற்குப் பிறகு நடிகர் கிருஷ்ணா — சுனைனா இருவரும் முதலில் நட்பாக பழகினார்கள். பின் இந்த நட்பு காதலாக மாறியது.

Actor Krishna's Wife Files Dowry Complaint | NETTV4U
கிருஷ்ணா திருமணத்தின் போது

மேலும், சுனைனாவும், கிருஷ்ணாவும் நீண்ட காலங்களாக காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பதை கிருஷ்ணா — சுனைனா இருவரும் வாய் திறந்தால் மட்டுமே தெரியும்.

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் கிருஷ்ணர்வும் ஒருவர். கிருஷ்ணா பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன் தம்பி என்பது குறிப்பிடதக்கது. இவர் அலிபாபா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதற்கு பிறகு நடிகர் கிருஷ்ணா அவர்கள் கற்றது களவு, வல்லினம், யாமிருக்க பயமேன், கழுகு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

Advertisement