புகைப்படத்தில் இருக்கும் இந்த பிரபல நடிகர் யாருனு தெரியுதா? பாத்தா நம்ப மாடீங்க.

0
15808
parthiban
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன். இவர் இயக்குனர் , தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டவர். இவருடைய நடிப்பிலும், இயக்கத்திலும் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. கடந்த ஆண்டு இவருடைய வித்தியாசமான படைப்புகளில் ஒன்றாக வெளிவந்த “ஒத்த செருப்பு சைஸ் 7” மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் முழுக்க முழுக்க ஒரே ஒருவரை மையமாக வைத்து எடுக்கப்பட்டது.

-விளம்பரம்-

இதுவரை தமிழ் சினிமா உலகில் கொண்டு வராத புது முயற்சியை பார்த்திபன் செய்து உள்ளார். மேலும், இந்த படத்தை பார்த்திபன் அவர்களே தயாரித்தும், இயக்கியும், நடித்தும் உள்ளார். இந்த படத்தில் பார்த்திபன் அவர்கள் ஒன் மேன் ஆர்மி போல நடித்து இருக்கிறார். இந்நிலையில் நடிகர் பார்த்திபன் அவர்கள் முதன் முதலாக சினிமாவிற்குள் நுழைந்த படத்தின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

இதையும் பாருங்க : ரஹ்மான் பாடலை ரீமேக் செய்து மாட்டிக்கொண்ட பிரபல நிறுவனம். தனது ஸ்டைலில் பதில் கொடுத்த ஏ ஆர்.

- Advertisement -

ஆமாங்க, நடிகர் பார்த்திபன் அவர்கள் முதன் முதலாக 1981 ஆம் ஆண்டு எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த ராணுவ வீரன் என்ற படத்தில் தான் நடித்திருந்தார். இந்த படத்தில் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, சிரஞ்சீவி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் ஒரு சிறு வேடத்தில் பார்த்திபன் அவர்கள் நடித்திருப்பார்.

இந்த படத்தின் மூலம் தான் இவர் சினிமா உலகில் கால் தடம் பதித்தார். அதற்கு பிறகு இவர் பார்வையின் மறுபக்கம், தூரம் அதிகமில்லை, தாவணி கனவுகள் போன்ற பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதற்குப் பிறகு இவர் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த புதிய பாதை என்ற படத்தின் மூலம் தான் இவர் நீண்ட நேர கதாபாத்திரங்களில் நடிக்க தொடங்கினார். இதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து வந்தார்.

-விளம்பரம்-

அதற்கு பிறகு இவர் இயக்குனர் கே. பாக்கியராச்சிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர். பிறகு பல படங்களை இயக்கியும்,நடித்தும் வந்தார். மேலும், ராணுவ வீரன் படத்தில் நடிகர் பார்த்திபன் நடித்த காட்சியின் புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகியுள்ளது.

இதையும் பாருங்க : கடந்த சில மாதங்களுக்கு முன்னரே அரசு பள்ளி குழந்தைகளை ஆய்வு செய்தேன் – முதலமைச்சருக்கு சத்யராஜ் மகள் கடிதம்.

இதனை ரசிகர்கள் அனைவரும் அதிகமாக ஷர் செய்து வருகிறார்கள். தற்போது இவர் சிங்கிள் ஷாட்டில் இரவில் நிழல் என்ற படத்தை இயக்குகிறார். இதை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் மற்றொரு படத்தில் நடிக்க உள்ளார். புஷ்கர் காயத்திரி இயக்கத்தில் நடிக்க சீரிஸில் நடித்து வருகிறார்.

Advertisement